இலங்கை அதிபராகிறார் அனுரா குமார திசநாயகே

கொழும்பு,

இலங்கையில் நேற்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பல்வேறு சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. இதன் இறுதி முடிவுகள் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Live Updates

  • 22 Sep 2024 8:04 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தலில் கடும் இழுபறி: தொடர்ந்து முன்னேறும் சஜித் பிரேமதாசா

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து தற்போது 39 சதவீதமாக சரிந்துள்ளது.

    இரண்டாவது இடத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போதைய நிலையே நீடித்தால் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள். இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே ஒருவரால் இலங்கை அதிபராக முடியும் என்று கூறப்படுகிறது. இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி நமல் ராஜபக்சே 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னணி நிலவரம்:-

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 27,07,105 வாக்குகள் ( 39.52 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 23,48,052 வாக்குகள் ( 34.28 சதவீதம்)

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 11,92,649 வாக்குகள் (17.41 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 2,10,622 வாக்குகள் ( 3.07 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 1,62,733 வாக்குகள் ( 2.38 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 7:15 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: 50 சதவீத வாக்குகளைப் பெறுவதில் கடும் போட்டி – தற்போதைய நிலவரம்

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது. இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து தற்போது 39 சதவீதமாக சரிந்துள்ளது.

    இரண்டாவது இடத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    தற்போதைய நிலையே நீடித்தால் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே ஒருவரால் இலங்கை அதிபராக முடியும் என்று கூறப்படுகிறது. இதனால் கடும்போட்டி நிலவுகிறது.

    இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி நமல் ராஜபக்சே 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னணி நிலவரம்:-

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 24,59,993 வாக்குகள் ( 39.44 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 21,24,298 வாக்குகள் ( 34.06 சதவீதம்)

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 10,94,426 வாக்குகள் (17.55 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 2,10,379 வாக்குகள் ( 3.37 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 1,42,589 வாக்குகள் ( 2.29 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 1,075 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 6:30 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: அதிரடியாக மாறும் முன்னிலை நிலவரம்

    இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரா குமார திசநாயகே முன்னணியில் உள்ளார்

    தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரா குமார திசநாயகேவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த திசநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. 

    இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் அதிரடியாக மாறி வருகிறது.

    இதன்படி இலங்கை அதிபர் தேர்தலில் அனுரா குமரா திசநாயகேவின் வாக்கு சதவீதம் 50 சதவீதத்தில் இருந்து தற்போது 40 சதவீதமாக சரிந்துள்ளது.

    இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

    தற்போதைய நிலையே நீடித்தால் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

    இந்த தேர்தலில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றால் மட்டுமே ஒருவரால் இலங்கை அதிபராக முடியும் என்று கூறப்படுகிறது.

    இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன்படி நமல் ராஜபக்சே 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னணி நிலவரம்:-

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 22,37,983 வாக்குகள் ( 39.85 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 18,83,429 வாக்குகள் ( 33.54 சதவீதம்)

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 9,57,736 வாக்குகள் (17.32 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 2,04,598 வாக்குகள் 

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 1,30,134 வாக்குகள் 

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 760 வாக்குகள் 

    • Whatsapp Share

  • 22 Sep 2024 5:33 AM GMT

    பரபரக்கும் இலங்கை அதிபர் தேர்தல் களம்: முன்னணி நிலவரம்

    இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே முன்னிலை வகித்து வருகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரைக் காட்டிலும் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அனுரா குமார திசநாயகே முன்னணியில் உள்ளார்

    தபால் வாக்குகளில் தொடங்கி, இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் வரையிலும் அனுரா குமார திசநாயகேவே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றிருந்த திசநாயகேவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்த கட்டங்களில் படிப்படியாக குறைந்தது. இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்கே மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

    முன்னணி நிலவரம்:-

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 7,01,820 வாக்குகள் (16.90 சதவீதம்)

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 17,32,386 வாக்குகள் ( 41.71 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 1,01,999 வாக்குகள் ( 2.46 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 13,02,280 வாக்குகள் ( 31.35 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 1,74,316 வாக்குகள் ( 4.2 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 760 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

    இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மை பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

    யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் சஜித் பிரேமதாசாவுக்கும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் அதிக வாக்குகள் விழுந்துள்ளன.

    • Whatsapp Share

  • 22 Sep 2024 4:38 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம் என்ன..?

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார்.

    அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னணி நிலவரம்:-

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 5,63,054 வாக்குகள் (15.82 சதவீதம்)

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 15,70,412 வாக்குகள் ( 44.12 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 94,331 வாக்குகள் ( 2.65 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 10,76,029 வாக்குகள் ( 30.23 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 1,37,708 வாக்குகள் ( 3.87 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 625 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 3:52 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: தற்போதைய நிலவரம்

    இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    இரண்டாவது இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா நீடிக்கிறார்.

    அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

    முன்னணி நிலவரம்:-

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 4,50,022 வாக்குகள் (15.93 சதவீதம்)

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 12,68,357 வாக்குகள் ( 44.90 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 77,932 வாக்குகள் ( 2.76 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 8,30,019 வாக்குகள் ( 29.38 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 75,726 வாக்குகள் ( 3.64 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 328 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 3:36 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

    தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

    முன்னணி நிலவரம்:-

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 3,13,354 வாக்குகள் (15.08 சதவீதம்)

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 9,83,317 வாக்குகள் ( 47.31 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 61,307 வாக்குகள் ( 2.95 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 5,81,520 வாக்குகள் ( 27.98 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 75,726 வாக்குகள் ( 3.64 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 328 வாக்குகள் ( 0.02 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 2:53 AM GMT

    இலங்கை அதிபர் தேர்தல்: முன்னிலை நிலவரம்

    தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

    வாக்குகள் எண்ணப்பட்டுவரும்நிலையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

    தற்போதைய நிலவரம்

    ரணில் விக்கிரமசிங்கே (சுயேச்சை) – 2,62,057 வாக்குகள் (16.37 சதவீதம்)

    அனுரா குமார திசநாயகே (தே.ம.ச.) – 7,96,941 வாக்குகள் ( 49.77 சதவீதம்)

    நமல் ராஜபக்சே (இ.பொ.ப.) – 46,757 வாக்குகள் ( 2.92 சதவீதம்)

    சஜித் பிரேமதாசா (ஐ.ம.ச.) – 4,12,845 வாக்குகள் ( 25.78 சதவீதம்)

    அரியநேந்திரன் (தமிழ் வேட்பாளர்) – 37,748 வாக்குகள் ( 2.36 சதவீதம்)

    திலகர் (தமிழ் வேட்பாளர்) – 218 வாக்குகள் ( 0.01 சதவீதம்)

    • Whatsapp Share

  • 22 Sep 2024 2:45 AM GMT

    இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிப்பு

    இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி ஊரடங்கு உத்தரவு பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணியில் இருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலை கருத்தில் கொண்டு, நாளை (செப்டம்பர் 23ம் தேதி) இலங்கையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp Share

  • 22 Sep 2024 2:36 AM GMT

    இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராகும் அனுரா குமார திசநாயகே

    இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே 50 சதவீத வாக்குகளுடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனால் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக அனுரா குமார திசநாயகே தேர்தெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்கள் அனுரா குமார திசநாயகேவை வெற்றியாளராக அறிவித்துள்ளனர்.

    அனுரா குமார திசநாயகே வெற்றி பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கேவின் நெருங்கிய கூட்டாளியான இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

    இதனிடையே வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தனது எக்ஸ் வலைதளத்தில், “நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன. நான் அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போதிலும், இலங்கை மக்கள் தமது முடிவை எடுத்துள்ளனர், மேலும் அனுரா குமார திசநாயகேவுக்கான அவர்களின் ஆணையை நான் முழுமையாக மதிக்கிறேன். ஜனநாயகத்தில், மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது முக்கியம், நான் அதை தயக்கமின்றி செய்கிறேன். அனுரா குமார திசநாயகே மற்றும் அவரது கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp Share


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.