Kanguva: `ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்' படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

சூர்யாவின் ‘கங்குவா’ வருகிற நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில், 3டி தொழில் நுட்பத்தில் வெளியாவதால் போஸ்ட்புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

திஷா பதானி

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் 20ம் தேதி நடைபெறும் என்ற தகவல் பரவி வருகிறது. ‘சிறுத்தை’ சிவா வின் இயக்கத்தில் சூர்யா நடித்து ‘கங்குவா’ சூர்யாவின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். தவிர திஷா பதானி, நட்டி நட்ராஜ், ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, ஆனந்தராஜ், கோவை சரளா, கருணாஸ், கே.எஸ்.ரவிகுமார் என பலரும் நடித்துள்ளனர்.

இது குறித்து ‘கங்குவா’ வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..

” `கங்குவா’வின் டீசருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மொத்த படத்தையும் கவனமாக செதுக்கி வருகிறோம். இரண்டாவது சிங்கிள் மற்றும் புது டீசர் ஆகியவை குறித்துத் திட்டமிட்டு வருகிறோம். அனேகமாக சூர்யாவின் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட் நிச்சயம் இருக்கும். அதே சமயம் ஆடியோ வெளியீடு நவம்பர் மாத தொடக்கதில் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். படத்தின் கிராபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ். வேலைகள் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்துள்ளது. அதிலும் சென்ற டீசரில் இடம்பெற்றுள்ள முதலை காட்சியில், முதலைக்கான கிராபிக்ஸிற்கே ஒரு கோடிக்கு மேல் செலவு செய்துள்ளோம். இப்படி ஒவ்வொரு ஃபிரேமுக்கும் தனி கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சிவா” என்கின்றனர்.

சூர்யா

கிளைமாக்ஸ் போர்ஷனில் கார்த்தி நடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்கால சம்பவங்களை இணைத்த கதை இது. எனவே பீரியட் காலகட்ட போர்ஷன் இதில் பீரியட் போர்ஷன் 70 சதவிகிதம் இருக்கிறது. தவிர, நிகழ்கால போர்ஷனும் இருக்கிறது.

படத்தின் பின்னணி இசை பணிகள் தேவி ஶ்ரீபிரசாத்தின் ஸ்டூடியோவில் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே படத்தின் டீசரும், முதல் சிங்கிளாக ‘ஃபயர் ஸாங்’ பாடலும் வெளியாகி வரவேற்பை அள்ளின. இந்நிலையில் அடுத்த சிங்கிள் அக்டோபர் 2ம் தேதியும், படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 20ம் தேதியும், தீபாவளி அன்று இரண்டாவது டீசரும் வெளியாகும் என்ற தகவல் பரவி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.