Lubber Pandhu: “பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த நல்ல திரைப்படம்" – அஷ்வின் பாராட்டு

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், டி எஸ் கே, ஜென்சன், தேவதர்ஷினி, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘லப்பர் பந்து’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த ஆட்டக்காரராக இருக்கும் அட்டகத்தி தினேஷ், அவருக்கு நிகராக சிறந்த ஆட்டகாராக இருக்கும் துடிதுடிப்பான இளைஞரான ஹரிஷ் கல்யாண் இருவருக்குமிடையே நடக்கும் போட்டா போட்டிகள், பொறாமைகள், சரிக்குச் சரி நின்று தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வேட்கை என கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் இது. வெறும் கிரிக்கெட் மட்டும் என்றில்லாமல், ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களையும் விட்டு வைக்காமல், இந்திய சமூகத்தின் மனநோயாகத் தொற்றிக் கொண்டிருக்கும் சாதியத்தையும், ஆதிக்கத்தையும் யதார்த்தமாக உண்மைத் தன்மை குறையாமல் காட்சிப்படுத்தி சமத்துவத்திற்காக உரையாடலை நிகழ்த்தித் தனித்துவத்துடன் நின்று பாராட்டுகளை அள்ளியிருக்கிறது இந்த ‘லப்பர் பந்து’.

லப்பர் பந்து விமர்சனம்

இத்திரைப்படத்தைப் பார்த்திருக்கும் கிரிக்கெட் வீரரான அஷ்வின், ‘லப்பர் பந்து’ படத்தைப் பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து கூறியிருக்கும் அஷ்வின், “திரைப்படம் எடுப்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. பலரின் கடின உழைப்பு அதில் அடங்கியிருக்கிறது. அதனால், நான் எந்தப் படத்தைப் பார்த்தாலும் அதில் இருக்கும் குறைகளைச் சொல்லவதில்லை. நல்ல விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன்.

இருப்பினும், ஒரு உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்; பல ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட்டு சார்ந்த ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபமாக விளையாட்டை மையப்படுத்திய திரைப்படங்கள் ஒரே மாதிரியாக, கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டுத்தான் எடுக்கப்படுகின்றன.

ஆனால், கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள் அதிலிருந்து விலகி, யதார்த்தத்துடன் என்ன சொல்ல வேண்டுமோ, அதை மிகத் தெளிவாகச் சொல்லும் திரைப்படங்களாக இருக்கின்றன. ஒரு விளையாட்டை மையப்படுத்திய திரைப்படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதராணமாக இருக்கின்றன. அவ்வகையில் ‘லப்பர் பந்து’ தனித்துவத்துடன் மிக முக்கியமான திரைப்படமாக என்னைக் கவர்ந்திருக்கிறது.

படத்தில் ஒரு கதாபாத்திரம்கூட தேவையற்றதாக இருக்கவில்லை. ஒவ்வொரு கதாபாத்திரமும் கச்சிதாமாக, யதார்த்தமாக இருந்தது. இந்த அற்புதமான படைப்பை உருவாக்கிய இயக்குநர் மற்றும் படக்குவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். படத்தில் நடித்திருந்த ஹரிஸ் கல்யாண், கெத்து தினேஷ், சஞ்சனா, ஸ்வசிகா, காளி வெங்கட் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்” என்று பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார் அஷ்வின்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.