டாக்கா: துர்கா பூஜை பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ஹில்சா மீன்ஏற்றுமதி தடையை வங்க தேசஅரசு நீக்கியுள்ளது. இதன்படி, 3 ஆயிரம் டன் ஹில்சா மீன்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று நேற்றுமுன்தினம் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் – அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது, ஹில்சா மீன்கள் அதிகம் உண்ணப்படுகின்றன. இந்த மீன்கள் பெரும்பான்மையாக வங்கதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
மாணவர்கள் கலவரம் வெடித்தைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினமா செய்து ஷேக்ஹசீனா இந்தியா தப்பி வந்தநிலையில், தற்போது வங்கதேசத்தில் முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு ஹில்சா மீன்கள் ஏற்றுமதி செய்ய வங்கதேச அரசு தடைவிதித்தது. இந்நிலையில், தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது.