ஏர்டெல் வழங்கும் மலிவான டேட்டா பேக்… 7 ரூபாயில் 1GB… பயனர்கள் ஹேப்பி

ஏர்டெல் மலிவான டேட்டா பேக்: மொபைல் இணைய பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா திட்டம் கூட போதாது என்ற நிலை  ஏற்படுகிறது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில் மூன்று மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஏர்டெல்லின் டேட்டா பேக்குகள் ரூ.161, ரூ.181 மற்றும் ரூ.361 கட்டணங்களில் கிடைக்கக் கூடிய திட்டங்கள். இவை 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டவை. இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல்லின் டேட்டா திட்டங்களை (Airtel Prepaid Plans) மேலும் ஒருங்கிணைந்த திட்டங்களாக ஆக்கும். இதற்கு முன்பு சில தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களில்  குறிப்பிட்ட காலத்திற்கான வேலிடிட்டியுடன் கொடுக்கப்பட்டது.

ஏர்டெல் புதிய டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள் (Airtel New Data Recharge Plans)

ஏர்டெல் 161 ப்ரீபெய்ட் திட்டம்  (Airtel Rs 161 data plan)

ரூ.161 திட்டமானது தினசரி வரம்பு இல்லாமல் 12ஜிபி டேட்டாவை 30 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு ஜிபிக்கு ரூ.13 செலவாகும். 

ஏர்டெல் 181 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 181 data plan)

ஏர்டெல்லின் ரூ.181 ப்ரீ-பெய்டு திட்டத்தில், 15ஜிபி டேட்டா 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.  இந்த திட்டத்தில் ஒரு ஜிபிக்கு ரூ.12 செலவாகும். இந்தத் திட்டங்கள் 20க்கும் மேற்பட்ட OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகின்றன. இந்த திட்டத்தில், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சேவை 30 நாட்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெல் 361 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 361 data plan)

ஏர்டெல்லின் ரூ.361 திட்டம் 50ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற நாட்கள் செல்லுபடியாகும்.  இந்த திட்டத்தில் ஒரு ஜிபிக்கு ரூ.7 செலவாகும். பயனர்கள் ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருந்தால் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அதாவது 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட தினசரி 1ஜிபி டேட்டா திட்டத்திற்கு நீங்கள் ரீசார்ஜ் செய்திருந்தால், 361 டேட்டா திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாக இருக்கும். உங்கள் முதன்மை ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி காலம் 60 நாட்கள் என்றால், ரூ.361 டேட்டா திட்டத்தின் வேலிடிட்டி காலம் 60 நாட்களாகும்.

ஏர்டெல் குறைந்த கட்டணத்தில் டேட்டா பேக் திட்டங்களை வழங்குகிறது. இதற்கான கட்டணம் 150 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்த திட்டத்தில், குறைந்த நாட்களுக்கு டேட்டா வழங்கப்படுகிறது, இது உங்கள் தினசரி டேட்டா தேவையை பூர்த்தி செய்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.