புற்று நோய் முதல் இதய நோய் வரை… கருத்தடை மாத்திரைகளின் ஆபத்தான பக்கவிளைவுகள்

கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவது கர்ப்பத்தைத் தடுக்க பெண்களுக்கு  மிகவும் எளிதான, ஒரு பயனுள்ள நடைமுறையாக கருதப்படுகிறது. ஆனால், அது பாதுகாப்பானது தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நாம் சில காரணனங்களுக்காக எடுத்துக் கொள்ளும், பிற வகை மருந்து மாத்திரைகளையும் போலவே, கருத்தடை மாத்திரைகளுக்கும் பக்க விளைவுகள் உண்டு என்கின்றனர் நிபுணர்கள். இதனை ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மருத்துவ நிபுணர்கள் இது பற்றி அளிக்கும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்வோம்.

மூத்த மகப்பேறு மருத்துவரும், பிரிஸ்டைன் கேரின் இணை நிறுவனருமான டாக்டர். கரிமா ஸ்வாஹானி, கருத்தடை மாத்திரைகள் குறித்து கூறுகையில், இவை ஹார்மோன் அடிப்படையிலானவை என்றும் இதில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டின் கலவை அல்லது ப்ரோஜெஸ்டின் மட்டுமே உள்ளது. இவை கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியேறுவதைத் தடுக்கின்றன . மேலும், இவை, கருப்பை வாயைச் சுற்றியுள்ள சளியை அடர்த்தியாக்கி, விந்தணுக்கள் கருப்பையை அடைவதை தடுக்கின்றன. இந்த மாத்திரைகளை சரியாக எடுத்துக் கொண்டால், கரு உருவாவது 99 சதவீதம் தடுக்கலாம்.

கருத்தடை மாத்திரைகள் பெரும்பாலான பெண்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், சில பெண்களுக்கு இதனால் தீவிர பக்க விளைவுகள் ஏற்படலாம் என்கின்றனர்  நிபுணர்கள். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்

1. இதய நோய்:  கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இதய நோய் மற்றும் மாரடைப்பை ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

2.  இரத்த உறைவு: கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வது, இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கலாம், குறிப்பாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள் அல்லது 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த ஆபத்து அதிகம் இருக்கும்.

3. மார்பகப் புற்று நோய்: கருத்தடை மாத்திரைகளை  நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது மார்பகப் புற்றுநோயின்( Breast Cancer) அபாயத்தை அதிகரிக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

4.  கல்லீரல் பிரச்சனைகள்: கருத்தடை மாத்திரைகள் சில பெண்களுக்கு கல்லீரல் கட்டிகளை ஏற்படுத்தும் என்கின்றனர்  நிபுணர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.