கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை…

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு செப்டம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி முதல் 30 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை 65 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஹாரிஸ்பத்து, பூஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை ஆகிய நீர் நீர் வழங்கல் அமைப்புகளுக்கு சொந்தமான பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. 

மேலும், குண்டலசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரஜவெல்ல, சிறிமல்வத்த, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வலல பிரதேசங்களிலும் Greater Kandy நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகிக்கப்படும் மாவத்தகம பிரதேசத்திலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.  

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.