மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

மக்களின் வளங்களை அனுபவிக்காது ஜனரஞ்சகமான அரச சேவைக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு புதிய பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின்  (26)  அதிகாரிகளுடன் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய; 

“இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலில் தெரிவாகாத ஒருவரே தற்போது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இருந்த அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அதிகமான மக்களின் விருப்பத்துடன் இந்த ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் கடந்த காலங்களில் தமக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து அம்மக்கள் தமது தீர்மானத்தை வெளியிட்டார்கள்.

இம்முறை இடம் பற்ற ஜனாதிபதித் தேர்தல். கட்சிகளால் தீர்மானிக்கப்பட்ட தேர்தல் என்பதை விட மக்களினால் நடாத்தப்பட்ட தேர்தல் எனக் குறிப்பிட்டார் அதுவே சரியானது.

ஜனாதிபதி தமது பணியை பொறுப்பெடுத்த பின்னர் மக்களுக்கு உரையாற்றும் போது நாட்டின் அபிவிருத்திக்கு மக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அரச சேவை இடையே முழுமையான நம்பிக்கை காணப்பட வேண்டும்.

மக்களுக்கு அந்த நம்பிக்கை இல்லாமல் ஆகிவிட்டது. அதனை மீண்டும் ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுவது எமது பொறுப்பாகும். மக்கள் தனிமைப்பட்டு விட்டார்கள் என நினைக்கின்றேன்.

சட்டம், அரச சேவை, அரசியல் ஆணை குழுக்கள் தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை இன்றி நாட்டை கட்டி எழுப்ப முடியாது. அந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக செயற்பட்டே எமக்கு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டி வரும்.

“வலுவான அரச சேவை ஒன்றே உருவாக்குவது எமது குறிக்கோளாகும். அரசாங்க ஊழியர்கள் வியாதியினமாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி,

“அரசாங்க ஊழியர்களாக விசேட கடமைப் பொறுப்புக்கள் எனக்கு உண்டு. மக்களை விட உயர்தரத்தில் இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தற்போது எம் எல்லோரையும் விடவும் தர உயர்தரத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

தனிப்பட்ட ரீதியாக எமக்கு தனியான அரசியல் விருப்பங்கள் காணப்படலாம். ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எம் எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. மக்களுக்கு பணியாற்றுவதற்கு இதைவிடவும் அர்ப்பணிப்பு செய்வது மிகவும் அவசியமாகும்” என்று பிரதமரின் செயலாளர் மேலும் வலியுறுத்தினார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.