வரி செலுத்துபவர்களுக்கான அறிவிப்பு…

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரியை செலுத்த வேண்டிய அனைவரும், அந்த மதிப்பீட்டு ஆண்டுக்குரிய அனைத்து வருமான வரியினையும் 2024 செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக செலுத்தி முடிக்க வேண்டும் அவ்வாறில்லாவிடின் வருமான வரி செலுத்தாததற்கு அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் 2024 ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நிலுவையில் உள்ள அனைத்து இயல்புநிலை வரிகளையும் செலுத்தி முடிக்குமாறு வரி செலுத்துபவர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.

அந்த திகதிக்குப் பின்னர் செலுத்தப்படாதுள்ள வரிகளுக்கு உள்நாட்டு இறை வரி சட்ட நியதிகளுக்கு அமைவாக உள்ள சட்ட நடவடிக்கைகள் உள்ளடங்களாக, கடுமையான சேகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு 1944 அல்லது அருகில் உள்ள பிராந்தி அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் வரி செலுத்துபவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.