Tirupati Laddu: "நீங்க மிகப்பெரிய ஆன்மீகவாதி; திருப்பதி லட்டு குறித்து..?" – ரஜினியின் பதில் என்ன?

திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக அறிக்கை வந்தது முதல் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினியின் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்துவருகிறது. இந்நிலையில், இன்று காலை அவர் விசாகப்பட்டினத்திலிருந்து சென்னை திரும்பியபோது நிருபர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர்.

வேட்டையன் படம் குறித்து பேசும்போது…

வேட்டையன் படம் குறித்துப் பேசும்போது, “வேட்டையன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவை அனைத்தும் நிச்சயம் நிறைவேறும் என்று நம்புகிறேன். வேட்டையனுக்குக் கிடைக்கும் வரவேற்பு சந்தோஷமாக இருக்கிறது. சமீபத்தில் தர்பாருக்குப் பிறகு முழு நேர போலீஸாக நடித்தது வித்தியாசமான அனுபவம்.” என்று கூறினார்.

பின்னர், “நீங்க மிகப்பெரிய ஆன்மிகவாதி, திருப்பதி லட்டு விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ரஜினி, “சாரி…சாரி… நோ கமெண்ட்ஸ்” என்று கூறி, அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.