IIFA 2024: ` இது அவமரியாதை; உங்கள் விருது தேவையில்லை..' – கன்னட இயக்குநர் காட்டமான பதிவு

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு ‘சப்த சாகரடச்சே எல்லோ’ திரைப்படம் சைட்-ஏ, சைட்- பி என இரண்டு பாகங்களாக வெளியாகி ஹிட்டடித்திருந்தது. இந்தப் படத்தை ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்திற்காக கொண்டாடப்பட்ட இவர் திரைக்கதைக்காக தேசிய விருதையும் வென்றிருக்கிறார். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஶ்ரீராம் ராகவனின் ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் திரைக்கதையாசிரியர் இவர்தான்.

கடந்த செப்டம்பர் 28-ம் தேதி அபு தாபியில் `IIFA’ விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவை ஷாருக் கான், விக்கி கெளஷல், கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கியிருந்தனர். இந்த விருது விழாவில் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலிருந்தும் பல ஆளுமைகள் கலந்து கொண்டனர்.

‘சப்த சாகரடாச்சே எல்லோ’ படத்தின் இயக்குநரான ஹேமந்த் ராவும் இந்த விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த விழாவில் அவருக்கு நிகழ்ந்த அவமரியாதை தொடர்பாக காட்டமான பதிவு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Director Hemantn Rao

இது குறித்து அவர், ” இந்த முழு `IIFA’ அனுபவமும் எனக்கு சிரமத்தையும் அவமரியாதையையும் உருவாக்கியது. நான் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்த இன்டஸ்ட்ரியில் இருக்கிறேன். எனக்கு விருது இல்லை என்பதை மட்டுமே நான் அறிந்து கொள்வதற்கு காலை 3 மணி வரை விருது நடக்கும் இடத்திலேயே இருந்தேன். இதே விஷயமும்தான் என்னுடைய இசையமைப்பாளர் சரண் ராஜுக்கும் நிகழ்ந்தது. இது உங்களுடைய விருது. இதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அது உங்கள் விருப்பம். நான் பல விருதுகளை வெல்லவில்லை. அதனால் தூக்கத்தையும் இழக்கவில்லை.

அனைத்து நாமினிகளும் அழைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு வின்னரை தெரிவிப்பார்கள். இதனால் நான் எரிச்சலடைய மாட்டேன். இந்த வருடம் நீங்கள் வெறும் விருதை மட்டும்தான் வழங்கியிருக்கிறீர்கள். நாமினிஸ் பற்றி எந்த தகவலும் நீங்கள் குறிப்பிடவில்லை. இந்த விருது விழா நீங்கள் வைக்கும் திறமையின் அடிப்படையில்தான் இயங்குகிறது. உலகத்தின் சிறந்த வேலையை நான் அனுபவிப்பதற்கு எனக்கு உங்கள் விருது தேவையில்லை.

Director Hemanth Rao Post

அடுத்த முறை நான் உங்கள் மேடைக்கு தேவைப்படுவேன். உங்கள் விருதை எடுத்து சூரியன் ஒளிராத இடத்தில் வைத்துக் கொள்ளாது. என்னுடைய குழுவினர் சிலர் மேடைக்குச் சென்று விருது பெற்றார்கள். அதனால் இது முழுவதுமாக நேரத்தை வீணடிப்பது அல்ல. இதே பிரிவில் கன்னட இயக்குநர் அருண் சுதீர் விருதை வென்றதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவருக்கும் அவருடைய குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள் ” எனப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.