Anirudh: அஜித்தின் 'விடாமுயற்சி'க்கு BGM… விஜய்க்கு ஓப்பனிங் சாங் – அசத்தும் அனிருத் லைன்அப்

ரஜினி, விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் இசையமைப்பாளராக முதல் சாய்ஸில் இப்போது இருப்பது அனிருத் தான். அவர் டோலிவுட்டில் இசையமைத்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் இசையில் அடுத்து திரைக்கு வரும் படமாக ரஜினியின் ‘வேட்டையன்’ இருக்கிறது. படத்தின் டிரைலர் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரின் `Hukum’ வேல்ர்டு டூரின் அடுத்த பயணமாக சிங்கப்பூரிலும் வரும் நவம்பர் 30-ம் தேதி நடைபெறுகிறது.

ஜூனியர் என்.டி.ஆருடன்..

ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் பின்னணி இசை வேலைகள் இரவும் பகலுமாக அனியின் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. இதற்கிடையே டிரைலருக்கும் இசையமைத்து கொடுத்துவிட்டார். இதனை அடுத்து மீண்டும் ரஜினியுடன் கைகோர்த்துள்ளார்.

”தன் படங்களுக்கு 1000 சதவிகிதம் அனி தான் இசையமைக்க வேண்டும்’ என ரஜினியும் விரும்புகிறார். இதனால் அவரின் அடுத்த படமான லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடித்து வரும் ‘கூலி’ படத்திற்கும் இசையமைக்கிறார் அனி. இதன் படப்பிடிப்பு சென்னையை தொடந்து இப்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், சோபின் ஷாஹிர் என பலரும் நடித்து வருகிறார்கள். படத்திற்கான பாடல்கள் மூன்று பாடல்களையும் கொடுத்துவிட்டாராம் அனி.

ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கருடன்..

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் 12-வது படமான ‘விடி 12’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை கௌதம் டின்னவுரி இயக்குகிறார். இதற்கு முன் நானியின் ‘ஜெர்ஸி’ படத்தை இயக்கியவர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு இலங்கையில் நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்களையும் கொடுத்துவிட்டார். இதற்கிடையே ‘மேஜிக்’ என்ற தெலுங்கு படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இதுவும் கௌதம் டின்னவுரியின் படம்தான்.

‘எஸ்.கே.23’ கூட்டணி

‘லியோ’வை தொடர்ந்து விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு முன் கடைசி படமான ‘விஜய் 69’ படத்தின் இணைகிறார் அனி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துணிவு” படங்களை இயக்கிய ஹெச்.வினோத் அதனை இயக்குகிறார். விஜய்யின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி நடக்கிறது. அதன்பின், ‘விஜய் 69’ படப்பிடிப்பு தொடங்கும் என்பதால், படத்திற்கான ஓப்பனிங் பாடல்களை உருவாக்கும் வேலையையும் தொடங்கிவிட்டனர்.

விஜய் – அனிருத்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்.கே.23’ படத்தின் பாடல்களும் படமாக்கப்பட்டு விட்டன. இந்த படத்தில் சிவாவோடு ருக்மணி வஸந்த் நடித்து வருகிறார். சிவா இப்போது ‘அமரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் தீபாவளிக்கு இது திரைக்கு வருகிறது. ‘அமரன்’ ரிலீஸை அடுத்து, முருகதாஸ் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது.

அஜித்துடன்..

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. இதன் பின்னணி இசை வேலைகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்கிடையே ஷங்கர்- கமல் கூட்டணியின் ‘இந்தியன் 3’யும் கைவசம் வைத்திருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார். இது கவின் 5வது படமாகும். இதன் படப்பிடிப்பும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. தவிர, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘எல்.ஐ.கே’ படத்திற்கான பாடல்களையும் கொடுத்துவிட்டாராம் அனி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.