Google: முன்னாள் ஊழியரை மீண்டும் பணியமர்த்த ரூ.22,000 கோடி கொடுத்த கூகுள் – யார் இந்த NOAM SHAZEER?

AI உலகில் நோம் ஷஜீர் மிகப் பிரபலமானவர். 48 வயதான நோம் ஷஜீர் (NOAM SHAZEER) கடந்த 2000ம் ஆண்டு கூகுளில் மென்பொருள் பொறியாளராக சேர்ந்தார். இவர் தனது சக ஊழியர் டேனியல் டி ஃபிரேடோஸூடன் (DANIEL DE FRATOS) சேர்ந்து ஒரு சாட் பாட் [CHAT BOT] உருவாக்கினார். இதை வெளியிட கூகுள் நிறுவனம் மறுத்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கூகுளை விட்டு இருவரும் விலகினர்.

பின்னர் கேரக்டர்.AI(Character.AI) எனும் நிறுவனத்தை இருவரும் சேர்ந்து தொடங்கினர்.தொடங்கிய சில வருடங்களில் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம் .கடந்த ஆண்டு 1 billion டாலர் மதிப்பை அடைந்த கேரக்டர் AI, சிலிக்கான் வேலியில் [silicon valley] மிகப்பிரபலமான மற்றும் மிகச்சிறந்த AI ஸ்டார்ட்டப் ஆகும்.

கூகுள்

இந்த நிலையி்ல் கூகுள் நிறுவனம் நோம் ஷஜீர் மற்றும் டேனியல் டி ஃபிரேடோஸ் இருவரையும் கூகுளின் AI யூனிட்டான டீப்மைன்டில் சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் கேரக்டர்.A1 நிறுவனத்தை வாங்கி அந்நிறுவனம் பயன்படுத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உரிமம் கோரியுள்ளது . நோம் ஷஜீர் கூகுளில் பணிபுரிய $ 2.7 பில்லியன் வழங்கியுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளது .

நோம் ஷஜீரைப் பணியில் சேர்ப்பதற்காகவே கேரக்டர். AI நிறுவனத்தை கூகுள் வாங்கியுள்ளதாக அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

கூகுள் நிறுவனத்தின் முந்தைய CEO எரிக் ஷ்மிட் கூட நோம் ஷஜீரின் திறமையில் மிகவும் கவரப்பட்டார். அவர் நோமை மிகவும் நம்பினார். அவரும் மனிதனைப் போல உரையாடும் சாட் பாட்டான (CHAT BOT ) மீனாவை [Meena] உருவாக்கினார். பாதுகாப்பு அம்சங்களால் இது வெளியிடப்படவில்லை.

தற்போது நோம் ஷஜீர் கூகுளின் ஜென் AI ஆன ஜெமினியின் அடுத்த வெர்ஷனை மேம்படுத்தும் பணியில் உள்ளதாக தெரிகிறது. இது ஓபன்AI இன் ChatGPT க்கு போட்டியாக இருக்கும் என கூறுகிறார்கள்.

கூகுள் நிறுவனம் தன்னுடைய முன்னாள் ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க 22,000 கோடி கொடுத்ததுதான் இப்போது டெக் உலகில் ஹாட் டாக்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.