Thalapathy 69: விஜய் – பூஜா ஹெக்டே டூயட்; பிரமாண்ட செட்; தொடங்கிய படப்பிடிப்பு

விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘தளபதி 69 படத்தின் பூஜை சென்னையில் நேற்று எளிமையான முறையில் நடந்திருக்கிறது. படத்திற்கான ஸ்டார் காஸ்ட் குறித்து யூகங்கள் அடிப்படையில் பல்வேறு தகவல்கள் கிளம்பி விடக்கூடாது என்று கருதிய தயாரிப்பு நிறுவனம், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப குழு ஆகியவற்றையும் அறிவித்துள்ளனர்.

படப்பூஜையின் போது

அஜித்தின் ‘துணிவு’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இது விஜய்யின் 69வது படமாகும். இதன் பின் அவர் அரசியலில் முழுநேர கவனம் செலுத்தவிருப்பதால், ‘தளபதி 69’ படத்திற்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரின் போது ‘The Torch bearer of Democracy is arriving’ என்ற வரிகளுடன் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ஜனநாயகத்திற்கான தீப்பந்தத்தை ஏற்றுவதற்கான கதை இது என்று சொல்லத் தொடங்கிவிட்டனர்.

இயக்குநர் ஹெச். வினோத்

விஜய்யின் அரசியல் பாதைக்கு வித்திடும் படம் இது என்றும் தீப்பந்தத்தை ஏந்தி அரசியல் தீப்பொறியைக் கிளப்பும் திரைப்படமாக இருக்கும் என்று பேச்சுக்கள் கிளம்பின. ஆனால், இயக்குநர் வினோத், ‘இது எல்லாருக்கும் பிடிக்கும்படியான விஜய் படமாக இருக்கும்’ என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். அதற்கேற்றார் போல் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியா மணி, மோனிஷா பிளஸ்சி என கலர்ஃபுல் நடிகைகள் இருக்கிறார்கள். சூர்யாவின் ‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்து வரும் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன் என கம்பீர வில்லன் கூட்டணியும் இருக்கிறது. சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, அனல் அரசுவின் ஸ்டண்ட்ஸ் என புது டீமுடன் கைகோத்துள்ளார் வினோத்.

இந்த படத்தை தயாரித்து வரும் ‘KVN Productions’ கன்னடத்தில் ‘கே.ஜி.எஃப்’ நடிகர் யஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’படத்தைத் தயாரித்து வருகிறது. இதற்கு முன்னர் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘அனிமல்’, ‘சீதா ராமம்’, ‘கல்கி’ போன்ற படங்களின் கன்னட விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டிருக்கிறது.

நேற்று படப்பூஜை நடந்த அதே நாளில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு பந்தல் கால் நடும் பூஜை நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது விஜய்யின் மக்கள் இயக்க உறுப்பினர்கள், தொண்டர்கள் மாநாட்டிலும், சினிமா ரசிகர்களின் கவனம் படப் பூஜையிலுமாக இருக்கட்டும் என நினைத்திருக்கிறார் விஜய்.

மமிதா பைஜுவுடன்..

சென்னைக்கு அருகே உள்ள பையனூரில் பெப்சி அமைப்பினருக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. அங்கேதான் ரஜினியின் ‘ஜெயிலர்’ உள்பட பல படங்களின் ஷூட்டிங்குகள் நடந்திருக்கின்றன. அந்த இடத்தில் தான் ‘தளபதி 69’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. முன்னதாக கடந்த மாதத்தில் இருந்தே கலை இயக்குநர் செல்வகுமார் கைவண்ணத்தில் பாடல் காட்சிக்கான பிரமாண்ட அரங்கம் ஒன்றை அமைத்து வந்தனர். திட்டமிட்டபடி செட் ரெடியாகிவிடவே, இன்று படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். விஜய், பூஜா ஹெக்டே காம்பினேஷனில் டூயட் பாடல் ஒன்று படமாகிறது. பாடல் ஷூட் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கும் என்றும், அதன்பின் பாபி தியோல் பங்கேற்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்த ஷெட்யூலை முடித்துவிட்டு, மாநாட்டு வேலைகளில் கவனம் செலுத்துகிறார் விஜய். மாநாடு முடிந்த பின்னரே, மீண்டும் ‘தளபதி 69’க்கு வருவார் என்கின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.