இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கை..

அரசியல் கட்சியில் இணையும் நபர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் திருமதி மேனகா பத்திரன தெரிவித்தார்.

இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகள் தொடர்பாக, தமது தனிப்பட்ட வங்கிக் கணக்கை அணுகுவதற்குப் பயன்படுத்தப்படும் இரகசிய எண், கடவுச்சொல் மற்றும் OTP எண் போன்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் பரவி வருவதால், இதுபோன்ற எந்த சூழ்நிலையிலும் தனது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.