Bigg Boss Tamil 8 : 24 மணி நேரத்தில் வெளியேறும் நபர்; அதிரடி காட்டும் பிக்பாஸ்

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியிருக்கிறது `பிக்பாஸ் தமிழ் சீசன் 8′. கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தொடங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8

முகத்துக்கு நேராகவே ஒவ்வொருத்தரின் குறை, நிறைகளை அவ்வளவு இயல்பாய் தவறாமல் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8

இந்த முறை பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒருபுறம்! பெண்கள் அனைவரும் பிங்க் நிற பெட்ரூம் இடம் கேட்டதால், `நாங்கள் விட்டுக் கொடுக்கிறோம் ஆனா ஒரு வாரம் நீங்க எந்த ஆண்களையும் நாமினேட் பண்ணக் கூடாது’ என்கிற நிபந்தனையுடன் ஆண்கள் அந்த இடத்தை பெண்களுக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். `இது மிகப்பெரிய ட்ரிக்’ என இப்பொழுதே வீட்டினுள் தீ பரவ ஆரம்பித்து விட்டது.

பிக் பாஸ் வீட்டில் இன்னொரு சர்ப்ரைஸாக, பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்திருக்கிறார் புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி. `ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு’ எனும் தீமுக்கு ஏற்ப இந்த எலிமினேட்டும் பலரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 8

போட்டியாளர்கள், ரசிகர்கள் என எவரும் எதிர்பாராத இந்த அறிவிப்பு இனி வரும் எபிசோட்கள் குறித்த எதிர்பார்ப்பினை இன்னும் அதிகரித்திருக்கிறது. 

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.