எதிர்பாரா வரம் – குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

அடர்ந்த யூக்கலிப்டஸ் மரங்களிடையே அமைந்திருக்கும் லவ்டேல் ரயில் நிலைய இருக்கையில் அமர்ந்து கொண்டு குளிர் தாங்க முடியாமல் பற்களால் மிருதங்கம் வாசித்து கொண்டிருந்தான் முஸ்தபா. ஆனால் கை, கால், தலையில் காயங்களுடன் கட்டுகளுடன் கண்களில் நீர் தேங்க கண்ணண் அமர்ந்திருக்க பொறுமை தாங்காமல் “டிஸ்சார்ஜ் ஆன கையோட எதுக்கு இங்க வந்து உக்காந்து இருக்கோம்” என்று கண்ணணை கேட்டான் முஸ்தபா.

சில நொடிகளுக்கு பிறகு தொண்டை குழியில் கல் சிக்கியவன் போல முஸ்தபாவை பார்த்து “மைதிலியை டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கன்டா” என்றான் கண்ணன்.

கண்ணணை பார்த்து அதிர்ந்தபடி பார்வையிலேயே ஏன் என்றான் முஸ்தபா.  

“குழந்தை இல்லனா என்ன பெரிய தெய்வ குத்தமா, எங்க வீட்லயும் சரி அவ வீட்லயும் சரி பேசி பேசியே அவள சாவடிக்கிறாங்கடா, என் கண்ணுக்கு தெரிஞ்சே பல நாள் அழுதுருக்கா எனக்கு தெரியாம எவ்ளோ தடவ அழுதாளோ பாவம். இந்த 5 வருஷத்துல எனக்கும் அவளுக்கும் பெரிசா சண்ட வந்ததே கிடையாது, இதை தவிர.

சிறுகதை

அன்னைக்கி கூட பாரு அவ பேச நான் பேச, நான் கத்த அவ கத்த, கோச்சிகிட்டு அவங்க ஊருக்கு போயிட்டா, நான் இந்த பாழாப்போன குடியால விழுந்து வாரி ஒரு பத்து நாள்ல” என்று சொல்லி முடிப்பதற்குள் கண்ணணிண் கண் அணையிலிருந்து நீர் கசிய தொடங்கியது.

கண்ணீரை துடைத்தபடியே “இவ்ளோ நாள் சின்ன நம்பிக்கை இருந்துச்சு குழந்தை பிறந்தா எல்லா சரியாகிடும்னு இந்த விபத்துக்கு அப்றோம் இனி நான் நினைச்சாலும் குழந்தை…” என்று தன் தொடையை கைகளால் குத்தி கொண்ட கண்ணணை பார்த்து “உன் சம்சாரம் ஆஸ்பிட்டல் கூட வரலைல” என்ற கேள்வி அம்பை தொடுத்தான் முஸ்தபா.

“அவளுக்கும் கோபமிருக்கும்லடா… அன்னைக்கு ரொம்ப பேசிட்டேன். அது போக நிறைய வாட்டி எனக்கு கால் பண்ணிருக்கா தாடைல அடிப்பட்டு என்னால பேசவே முடியல.

சரி வா மைதிலி வீட்டுக்கு போலாம்” என்று எழும்ப முயன்றான் கண்ணண்.

“இரு இரு போலாம். அதுக்கு முன்னாடி உன் வைஃப் கர்ப்பமா இருக்காங்க தெரியுமா” என்றான் முஸ்தபா. 

சிறுகதை

அந்த நீலகிரி மலை குளிரை அப்போது தான் உணர தொடங்கினான் கண்ணண் “டேய் என்னடா சொல்ற” என்றான் உரைந்தபடி .

“ஆமா 6 வாரமாச்சு, அதுவும் ட்வின்ஸ் டா, இதெல்லா முதமுதல்ல உன் கிட்ட அவங்க தான் சொல்லனும்னு உன் சம்சாரம் என் கிட்ட சத்தியம் வாங்குனாங்க. நீ என்னனா அதுக்குள்ள டைவர்ஸ் அது இதுனு பேசிட்டு இருக்க அதான் சொல்ல வேண்டியதா போச்சு.” என்று முஸ்தபா சிரிக்க கண்ணணின் அலைபேசி அலறியது எடுத்து பார்த்தால்,

“மை” திலி
காலிங்..

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.