ஸ்பேம் மெஸ்சேஞ் தொல்லையா… BSNL பயனர்கள் புகார் அளிக்க செய்ய வேண்டியவை

சமீபத்தில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்தின. இதனை அடுத்து பல பயனர்கள் தங்கள் எண்களை BSNL போர்ட் செய்து கொண்டனர் அல்லது புதிய சிம் வாங்கினர். இப்போது அதன் பயனர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கண்டு, பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்தவும், சேவைய மேம்படுத்தவும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.

BSNL இன்னும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு பழைய விலையில் வழங்கி வருகிறது. அதிகரித்து வரும் பயனர் எண்ணிக்கையைப் பார்த்து, BSNL மேலும் சில மலிவான திட்டங்களை பட்டியலில் சேர்த்துள்ளது. நிறுவனம் இப்போது 4G நெட்வொர்கினை பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் முழு வேகத்தில் செயல்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், BSNL 4G இணைப்பை நாட்டின் பல பகுதிகளில் காணலாம். இந்நிலையில், தற்போது பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை ஸ்பேம் செய்திகளில் இருந்து பாதுகாக்க புதிய சேவையை தொடங்கியுள்ளது.

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளில் இருந்து நிவாரணம் வழங்க ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஸ்பேம் அல்லது மோசடி எஸ்எம்எஸ் செய்தி அல்லது அழைப்புகள் தொல்லை குறித்து, நிறுவனத்திடம் புகார் செய்யலாம். BSNL Selfcare செயலிக்கு சென்று சில தகவல்களை கொடுக்க வேண்டும். அதன் பிறகு BSNL ஸ்பேம் அழைப்புகளிலிருந்து விடுபட AI என்னும் செயற்கை நுண்ணறிவு உதவியை நாடி நடவடிக்கை எடுக்கும்.

பிஎஸ்என்எல் பயனர்கள், நிறுவனத்தின் செல்ஃப்கேர் ஆப் மூலம் ஸ்பேம் அல்லது மோசடி எஸ்எம்எஸ் செய்தி அல்லது அழைப்பு எளிதாகப் புகாரளிக்கலாம். தற்போது வேறு எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் இந்த வகையான வசதியை பயனர்களுக்கு கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செல்ஃப்கேர் செயலியின் உதவியுடன் ஸ்பேம் செய்திகளை எவ்வாறு புகாரளிக்கலாம் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

1. BSNL Selfcare செயலியை திறக்கவும்.

2. முகப்புப் பக்கத்தின் மேல் இடது மூலையில் உள்ள மூன்று வரி மெனு மீது டாப் செய்யவும்.

3. கீழே ஸ்க்ரோல் செய்து, ‘புகார் மற்றும் முன்னுரிமை’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. அடுத்த பக்கத்தில், வலதுபுறத்தில் உள்ள மூன்று வரி மெனுவை டாப் செய்யவும்.

5. மெனுவிலிருந்து ‘புகார்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6. ‘புதிய புகார்’ என்பதைத் தட்டவும்.

7. உங்கள் புகாரைப் பதிவு செய்ய SMS அல்லது குரல் வழி புகார் தேர்ந்தெடுத்து தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.