‘சிறகடிக்க ஆசை’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் வெற்றி வசந்த்.
முதல் தொடரிலேயே தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார். ‘முத்து’ என்கிற கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தனது இயல்பான நடிப்பினால் இந்தக் கதாபாத்திரத்திற்கு அத்தனை உயிரோட்டம் கொடுத்திருக்கிறார் வெற்றி.
‘ராஜா ராணி 2’வில் தனது எதார்த்தமான நடிப்பினால் கவனிக்க வைத்தவர் வைஷ்ணவி சுந்தர். கேரக்டர் ரோலில் நடித்துக் கொண்டிருந்தவர் ‘பொன்னி’ தொடரின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்நிலையில் வெற்றி வசந்த்துக்கும், வைஷ்ணவிக்கும் இரு வீட்டு பெற்றோர்கள், பெரியவர்கள் முன்னிலையில் விரைவில் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு சிம்பிளாக நடைபெறவிருக்கிறது. அதனைத் தொடர்ந்து சின்னத்திரை படைகள் சூழ திருமண நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற இருக்கிறது.
திருமணம் என்கிற புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் இவர்கள் இருவரும் அவர்களுடைய புதிய பயணம் குறித்து அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள். இருவரும் இதுகுறித்து அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.
இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் வெற்றி – வைஷ்ணவி!