அமெரிக்கா, கனடா பேராசிரியர்கள் இருவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃரி இ ஹிண்டன் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் சார்பில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (அக்.8) இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை நரம்பியல் இணைப்புகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை கண்டுபிடிப்புகளுக்காக (for foundational discoveries and inventions that enable machine learning with artificial neural networks) பேராசிரியர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் பேராசிரியர் ஜெஃரி இ ஹிண்டன் ஆகிய இருவருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளருமான ஆல்ஃபிரட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க அவரது நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விருதுக்கும் சுமார் 10 லட்சம் டாலர்கள் (ரூ.8.30 கோடி) பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு நாளையும் (புதன்கிழமை), இலக்கியத்துக்கான நோபல் பரிசு வியாழக்கிழமையும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.14-ம் தேதி திங்கள்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளன. நோபல் வெற்றியாளர்களுக்கு டிசம்பர் மாதம் 1ம் தேதி ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளில் பரிசுகள் வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.