BB Tamil 8: “நீங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும்..!" – வி.ஜே விஷாலை வாழ்த்திய நேஹா

பிக் பாஸ் சீசன் 8 -ன் போட்டியாளர்களில் ஒருவராகச் சென்றிருக்கும் வி.ஜே விஷால் குறித்து நேஹா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பிள்ளை நிலா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நேஹா, வாணி ராணி, சித்தி 2, உட்பட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தற்போது பாக்கிய லட்சுமி சீரியலைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் லட்சுமி சீரியலில் கதாநாயகியின் தங்கச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

நேஹா மேனன்

இந்நிலையில் பாக்கிய லட்சுமி சீரியலில் எழில் கதாபாத்திரத்தில் நடித்திருந்த வி.ஜே விஷால் பிக் பாஸிற்கு சென்றிருக்கிறார். அந்த சீரியலில் அவருக்கு தங்கச்சியாக நடித்திருந்த நேஹா அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் அந்தப் பதிவில், “வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு தீர்க்கம் கொண்டிருந்த நீங்கள் இப்போது எட்டியிருக்கும் உயரங்களுக்கு உங்களது கடின உழைப்பு மட்டுமே காரணம்.

உங்களுடைய ஒவ்வொரு மேடையும் ஒவ்வொரு வெற்றியும் ஒவ்வொரு அங்கீகாரமும் நீங்களே உழைத்து ஈட்டியது. பிக்பாஸில் பங்கேற்பதற்காக உங்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன். உங்களை விரும்பும் அனைவரும் உங்களைச் சுற்றி எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நீங்கள் நினைத்ததைக் கட்டாயம் எட்டிப்பிடித்து விடுவீர்கள்.

எனக்கு ரொம்பவே பிடித்த நீங்கள் எப்போதுமே மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நீங்கள் விரும்பிய அனைத்தும் பெற்றவராகவும் இருக்க வேண்டும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.