பிளிப்கார்ட் சலுகை விற்பனை பிரிட்ஜ் முதல் ஸ்மார்ட்போன் வரை… மிகக் குறைந்த விலையில் வாங்கலாம்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சலுகை விற்பனைக்குப் பிறகு, மீண்டும் பிளிப்கார்ட் ( Flipkart) பிக் ஷாப்பிங் உத்சவ் என்னும் சலுகை விற்பனை அக்டோபர் 9 ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்காக தொடங்கியுள்ளது. இந்த சலுகை விற்பனையின் போது, ​​புதிய போன்கள், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பிரீமியம் இயர்போன்கள் போன்ற ஸ்மார்ட் கேஜெட்டுகள் மிக மலிவான விலையில் கிடைக்கும்.

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் விற்பனை தேதி

அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் (Flipkart Big Shopping Utsav Sale)என்னும் சலுகை விற்பனை ஐந்து நாட்களுக்கு இருக்கும். அக்டோபர் 13 ஆம் தேதி முடிவடையும் இந்த சலுகை விற்பனையில்,  புதிய ஸ்மார்ட்போன்களுக்கான (Smartphones) தள்ளுபடியைத் தவிர, டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கும் 90 சதவிகிதம் பம்பர் தள்ளுபடி கிடைக்கும். இது மட்டுமின்றி, சலுகை விற்பனையில் புதிய பிரீமியம் இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் போன்ற ஸ்மார்ட் கேஜெட்டுகளுக்கு 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

வீட்டு உபயோக பொருட்களுக்கான சலுகைகள்

ஃபிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் சலுகை விற்பனையில், வாடிக்கையாளர்கள் வாஷிங் மெஷின் மீது சிறந்த தள்ளுபடியை பெறலாம். வாஷிங் மெஷினை தள்ளுபடிக்குப் பிறகு, ரூ.6290 ஆரம்ப விலையில்  வாங்க முடியும் என்று கூறப்படுகிறது. ஃப்ரிட்ஜ்கள் தள்ளுபடிக்குப் பிறகு ரூ. 8,490 என்ற ஆரம்ப விலையில் விற்கப்படுகின்றன.

சலுகை விற்பனையில் ஏசி மாடல்கள்

பிளிப்கார்ட் நிறுவனத்தின் சொந்த பிராண்டான Marq தயாரிப்புகள், இந்த சலுகை விற்பனையில் 80 சதவீதம் வரை தள்ளுபடியில் வாங்கலாம். மின்சாரத்தை சேமிக்கும் ஏசி மாடல்கள் அதாவது நல்ல எனர்ஜி ரேட்டிங் கொண்ட புதிய ஏசி மாடல்கள் ரூ.19 ஆயிரத்து 999 விலையில்  வாங்கலாம்.

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உத்சவ் சலுகை விற்பனைக்கு வங்கிகள் கொடுக்கும் ஆஃபர் விபரம்

சலுகை விற்பனையில், ஆக்சிஸ், பாங்க் ஆப் பரோடா, ஆர்பிஎல் மற்றும் யெஸ் வங்கியுடன் பிளிப்கார்ட்  கைகோர்த்துள்ளது. அதாவது சலுகை விற்பனையின் போது இங்கே குறிப்பிட்டுள்ள வங்கிகளின் ஏதேனும் ஒரு கார்டைப் பயன்படுத்தினால், 10 சதவீத உடனடி தள்ளுபடியின் பலனைப் பெறலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.