இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் திணைக்களம் இணைந்து 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் இந்நாட்டு கடற்பகுதியில் மேற்கொள்கின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கவும், உள்ளூர் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 ஒக்டோபர் 09 ஆம் திகதி பிற்பகல், இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை வெளியேற்றுவதற்கான சிறப்பு நடவடிக்கையொன்று குறித்த கட்டளையில் மற்றும் கடலோர காவல் திணைக்களத்தில் உள்ள துரித தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தொரு (21) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் நான்கு (04) மற்றும் இருபத்தி ஒரு (21) இந்திய மீனவர்கள் காங்கேசந்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன் 2024 ஆம் ஆண்டில் இது வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐம்பத்தொன்பது (59) இந்திய மீன்பிடிக் படகுகள் மற்றும் நானூற்று முப்பத்து நான்கு (434) இந்திய மீனவர்கள், கடற்படையினரால் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.