சென்னை: மலையாள சினிமாவில் இன்றைக்கு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சௌபின் சாகிர். இன்று அதாவது அக்டோபர் 12ஆம் தேதி தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவர் மலையாள நடிகர் என்றாலும் இவருக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய இவர் அதன் பின்னர் நடிப்பின் பக்கம் திரும்பினார்.
