“பசி, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகள் இந்தியாவில் அதிகம்…" சர்வதேச ஆய்வு சொல்வதென்ன?

உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index)

அயர்லாந்தின் கன்சர்ன் வேர்ல்டுவைட் மற்றும் ஜெர்மனியின் வெல்த் ஹங்கர் லைஃப் ஆகியவை இணைந்து, உலகம் முழுவதும் 127 நாடுகளில் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் Global Hunger Index அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

உலக நாடுகளில், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை இறப்பு அடிப்படையில் பசியின் அளவை கணக்கிட மற்றும் கண்காணிக்க சர்வதேச மனிதாபிமான முகமைகளால் பயன்படுத்தப்படும் அளவீடு, உலகளாவிய பசி குறியீடு (Global Hunger Index).

கவலை பிரிவில் இந்தியா..

இந்த சர்வதேச ஆய்வில் வெளியிடப்பட்ட தகவலில், உலகளாவிய பட்டினி குறியீட்டில் 105-வது இடத்தில் இந்தியா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான 19 -வது உலகளாவிய பசி குறியீடு (GHI) அறிக்கையில் 127 நாடுகளுள் இந்தியா 105 வது இடத்தைப் பிடித்துள்ளது. அதிக மதிப்பெண் மற்றும் ரேங்க் பெற்ற நாடுகள் கடுமையான பசி, பட்டினி நெருக்கடியில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த குறியீட்டில் இந்தியா 27.3 மதிப்பெண்களுடன் ‘தீவிரமான’ பசி பிரச்னைகள் கொண்ட 42 நாடுகளுள் ஒன்றாக ‘கவலைக்குரிய’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. உலக அளவில் 36 நாடுகள் மட்டுமே ‘கவலை’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

இந்தியாவின் நிலை…

2000ம் ஆண்டில் இந்தியா 38.4 மதிப்பெண்,

2008ம் ஆண்டில் இந்தியா 35.2 மதிப்பெண்,

2016ம் ஆண்டில் இந்தியா 29.3 மதிப்பெண் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பட்டினி குறியீட்டில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் இன்னும் பசி, பட்டினி குறையவில்லை என்பதை இந்தக் குறியீடு சுட்டிக்காட்டுகிறது.

இந்தக் குறியீடில், இந்தியா தனது அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், இலங்கை, நேபாளம், மற்றும் வங்கதேசத்தை விட பின்தங்கி உள்ளது, எனினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு சற்று மேலே உள்ளது.

‘கன்சர்ன் வேர்ல்டுவைட்’ மற்றும் ‘வெல்த்ஹங்கர்ஹில்ஃப்’ இணைந்து வெளியிடும் GHI அறிக்கை உலகளாவிய பசியைக் கண்காணித்து அவசர நடவடிக்கை தேவைப்படும் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. நடப்பாண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் பாதிப்பு இந்தியாவில் சற்று அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளிடையே அதிகரிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு..

இந்தியாவில் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு கடுமையாக இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாக உள்ளது. அதே சமயம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாக உள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 2000ம் ஆண்டிலிருந்து குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திருந்தாலும், குழந்தைகளின் வளர்ச்சி குன்றிய நிலையிலேயே இருப்பதாக இந்த அறிக்கையில் கூறுகிறது.

2016 ஆம் ஆண்டிலிருந்து பட்டினி குறைப்பு நடவடிக்கைகளில் தேக்கம் காணப்படுவதாக கூறும் 2024 GHI அறிக்கை, 127 நாடுகளில், 42 நாடுகள் இன்னும் ‘தீவிர’ பட்டினி நிலையை அனுபவிப்பதால் 2030க்குள் பூஜ்ஜிய பட்டினி நிலையை அடைவதற்கான இலக்கு மிகவும் அரிதாக இருப்பதாகவே அறிவிக்கை கூறுகிறது.

பசியால் வாடும் ஏழைகள்

பசியால் வாடும் மக்கள்…

சர்வதேச அளவில், தினமும் சுமார் 733 மில்லியன் மக்கள் போதுமான உணவு கிடைக்காமல் பட்டினியால் வாடுகின்றனர். அதில், சுமார் 2.8 பில்லியன் மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

காங்கோ ஜனநாயக குடியரசு, மாலி, ஹைட்டி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளின் மோதல் மற்றும் உள்நாட்டு சண்டைகள் உணவு நெருக்கடிகளை உருவாக்குகின்றன. சில ஆப்பிரிக்க நாடுகள் “அபயகரமான” பட்டினி உடைய நாடுகள் வகையின் கீழ் உள்ளன. காசா மற்றும் சூடானின் போர்கள் காரணமாகவும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.