நடிகர், நாடகக் கலைஞர், இயக்குநர், அரசியல்வாதி என பன்முகத்தன்மைக் கொண்டவர் எஸ்.வி. சேகர்.
சினிமாவைத் தாண்டி தற்போது வரை மேடை நாடகங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். சமூக வலைதளப் பக்கங்களில் எஸ்.வி.சேகர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என பரவிய வதந்திகளுக்கு விளக்கமளித்து காணொலி ஒன்றைய பதிவிட்டிருக்கிறார்.
அந்த காணொலியில் அவர், “கடந்த இரண்டு நாட்களாக நான் வெர்டிகோ பிரச்னையினால் பாதிக்கப்பட்டதாக செய்திகளை பார்த்து பலர் `விரைவில் குணமுடைய இறைவனை பிரார்திக்கிறேன்!’ என பதிவிட்டு வருகிறார்கள். எனக்கு அது இரண்டு வருடத்திற்கு முன்னால் வந்தது. அதை மருத்துவர்கள் ஒரே நாளில் குணப்படுத்திவிட்டனர். என் பெயரில் ஃபேக் ஐடி எதுவும் உருவாக்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
நான் நலமுடன்தான் இருக்கிறேன். கடந்த மாதம் வீசிங் பிரச்னை வந்தது. அதையும் மருத்துவர்கள் 5 நாட்களில் குணமாக்கிவிட்டார்கள். அதன் பிறகு நேற்றுதான் என்னுடைய `காதுல பூ’ நாடகத்தைப் போட்டேன். இப்போது தும்மல், சளி, வாந்தி, பேதி, அரசியல் போன்ற எந்த நோயும் இல்லாமல் நலமுடன் இருக்கிறேன். எனது உடல்நிலை பற்றி நினைத்து என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்வது…நான் நல்லாயிருக்கேன் பா…நல்லாயிருக்கேன்! கடவுள் அருளால் நன்றாக இருக்கிறேன்.” என விளக்கமளித்திருக்கிறார்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…