Anirudh: `அடுத்த 10 மாதங்களில் 50 பாடல்கள்' – ரஜினி, ஷாருக், விஜய் என அசத்தும் அனிருத்தின் லைன் அப்

குறுகிய காலத்திலேயே இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்துவிட்டார் அனிருத்!

பல இயக்குநர்களும் தங்களுடைய திரைப்படத்திற்கு அனிருத்தான் தேவை என தீர்க்கமான முடிவில் இருக்கிறார்கள். அப்படி நம்பிய இயக்குநர்களின் நம்பிக்கையை அனிருத் ஒரு போதும் காப்பாற்ற தவறியதில்லை. ரஜினி, ஷாருக் கான், விஜய், அஜித் என அத்தனை உச்ச நட்சத்திரங்களின் விஷ் லிஸ்ட்டிலும் அனிருத் இருக்கிறார்.

Anirudh

சமீபத்திய பேட்டி ஒன்றில், `அடுத்த பத்து மாதங்களில் 50 பாடல்களை கம்போஸ் செய்ய வேண்டும். இதை நினைக்கும்போதே தலைவலி ஏற்படுகிறது’ எனக் கூறியிருந்தார். அப்படி மிரட்டும் லைப் அப்களை தன்கைவசம் வைத்திருக்கிறார் அனி!

ஷாருக் கான் `டங்கி’ திரைப்படத்திற்குப் பிறகு தற்போது ஒரு சிறிய இடைவெளி எடுத்திருக்கிறார். அடுத்த வருடம் ஜனவரி மாதம் தன்னுடைய அடுத்த திரைப்படமான `கிங்’ படத்தின் பணிகளை தொடங்குகிறார் ஷாருக். இப்படத்தை பாலிவுட் இயக்குநர் சுஜாய் கோஷ் இயக்குகிறார். ஜவான் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் `அனிருத் என் மகனை போன்றவர்’ எனக் கூறியிருந்தார் ஷாருக். அந்தளவுக்கு ஷாருக் மனதில் நீக்கமற இடத்தை பிடித்துக் கொண்டார், அனி. ஜவான் திரைப்படத்தைத் தொடர்ந்து ஷாருக் கானின் `கிங்’ திரைப்படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கவிருக்கிறார்.

vijay and anirudh

`மாஸ்டர்’, `விக்ரம்’, `லியோ’ என ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து மீண்டும் `கூலி’ திரைப்படத்திற்காக லோகேஷுடன் இணைந்திருக்கிறார் அனிருத். `வேட்டையன்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில், `இயக்குநர் ஞானவேல் எனக்கு 100 சதவீதம் அனிருத்தான் வேண்டும் என்றார். நான் எனக்கு 1000 சதவீதம் அனிருத்தான் வேண்டும் என்றேன்’ எனக் கூறியிருந்தார். இந்தளவுக்கு ரஜினியின் ஃபேவரைட் லிஸ்ட்டிலும் அனிருத் இடம் பிடித்திருக்கிறார்.

கமல்ஹாசனின் `இந்தியன் 2′ திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அடுத்ததாக `இந்தியன் 3′ திரைப்படமும் அனிருத்தின் லைன் அப்பில் இருக்கிறது. அ.வினோத் இயக்கும் விஜய்யின் கடைசி திரைப்படமான `தளபதி 69′ படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத். இதுமட்டுமல்ல, மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துவரும் `விடாமுயற்சி’ திரைப்படத்தின் இசையமைப்பாளரும் அனிருத்தான். இப்படி உச்சநட்சத்திரங்களின் அடுத்தடுத்த படங்களின் இசை பணிகளும் அனிருத்தின் கையில்தான் இருக்கிறது.

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத்

இதை தாண்டி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார். சிவாகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்திற்கு 9-வது முறையாக இசையமைக்கிறார் அனிருத். மேலும், அனிருத்தின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கும் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பேனி’ திரைப்படத்தின் இசை பணிகளையும் அனிருத்தான் மேற்கொண்டு வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான `தீமா’ என்ற பாடலையும் இன்று வெளியிட்டிருந்தார்கள். நடன இயக்குநர் சதீஷ், கவினை வைத்து இயக்கும் படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.

இப்படி கோலிவுட்டில் அசத்தல் லைன் அப்களை வைத்திருக்கும் அனிருத், டோலிவுட்டிலும் பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். `ஜெர்சி’ படத்தின் இயக்குநரான கெளதம் டின்னனுரி இயக்கும் `மேஜிக்’ திரைப்படத்திற்கும், விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படத்திற்கும் அனிருத்தான் இசையமைக்கிறார்.

Anirudh

மாலிவுட்டிலும் ப்ருத்விராஜ் நடிக்கும் `டைசன்’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவலும் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இதற்கு முன்பு மலையாள திரைப்படங்களின் பாடல்களை பாடியிருக்கிறார். ப்ருத்விராஜ் நடிக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது உறுதியானால் அதுவே அனிருத்தின் மாஸ் மாலிவுட் என்ட்ரி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.