`போகைன்வில்லா’ படத்திற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்ளப்போவதாக இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் அறிவித்திருக்கிறார்.
மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் சுஷின் ஷ்யாம் டாப் இடத்தை இறுக்கமாக பிடித்து அமர்ந்திருக்கிறார். அந்தளவிற்கு அதிரடியான ஹிட் ஆல்பம்களை ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே வருகிறார். இவருடைய கரியரையும் அனிருத்தின் கரியரையும் ஒப்பிட்டு பார்க்கும் விஷயமெல்லாம் சமூல வலைதளப் பக்கங்களில் அவ்வபோது நடக்கும்.
இந்தாண்டில் மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம் போன்ற மலையாள படைப்புகளுக்கு மிரட்டலான இசையை கொடுத்திருந்தார் சுஷின் ஷ்யான். இதுமட்டுமல்ல, `உள்ளொழுக்கு’ திரைப்படத்தில் இதயத்தை வருடம் மென்மையான இசையையும் கொடுத்து பன்முகத்தன்மையை காட்டியிருந்தார். இவர் இசையமைத்திருக்கும் `போகைவில்லா’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
மலையாள இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன், ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து ஒரு சிறிய இடைவெளியை எடுத்துக் கொள்ளவிருக்கிறாராம் சுஷின். இது குறித்து அவர், ” நான் மீண்டும் இந்த இசை பணிக்கு அடுத்தாண்டு வருகிறேன். இந்த இடைவெளி ஓய்வுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும்தான். `போகன்வில்லா’ திரைப்படத்திற்குப் பிறகு நான் வேறு எந்த புதிய திரைப்படங்களிலும் நான் கமிட்டாகவில்லை.” என ஒரு புரொமோஷன் நிகழ்வில் பேசியிருக்கிறார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்தாண்டு அதிரடியான படங்களுடன் சுஷின் ஷ்யாம் களமிறங்குவார் எனவும் அவரின் ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…