Bloody Beggar: `இந்தப் படத்தோட கதை ரொம்ப சிம்பிள்தான், ஆனால்…'- `பிளடி பக்கர்' குறித்து கவின்

இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘பிளடி பக்கர்’.

இப்படத்தினை தமிழ் சினிமா இயக்குநர் நெல்சன் திலிப்குமார் தனது ‘ஃபிலமென்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

பிளடி பக்கர்

அதில் பேசிய நடிகர் கவின், ” இந்த படத்தில் தான் கதையையே கேட்கவில்லை. படத்தின் சூட்டின் உள்ளிட்ட டீடெயிலை மட்டுமே கேட்டேன். அந்த அளவிற்கு இயக்குநர்மீது நம்பிக்கை இருந்தது. நெல்சன் திலீப்குமார், சிவபாலன் முத்துக்குமார் உள்ளிட்டவர்களுக்கு இது முதல் முயற்சி என்பதால் இந்த படத்தை மேலும் சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதில் தான் தீவிரமாக செயல்பட்டேன். இந்தப் படத்திற்காக நடத்தப்பட்ட லுக் டெஸ்ட் உள்ளிட்டவற்றின் மூலம் படம் குறித்த ஒரு நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.

மேலும் இந்த படம் குறித்து தன்னிடம் பேசிய நெல்சன் திலீப்குமார் பண்ணிடுவியாடா என்று மட்டுமே தன்னிடம் கேட்டார். நான் பண்ணிடுவேன் என்று தலையாட்டினேன். இது மட்டும் தான் தங்களுக்குள் துவக்கத்தில் படம் குறித்த பேச்சாக இருந்தது. தன்மீதும் தன் நடிப்பு மீதும் நெல்சன் திலீப் குமார் வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்ற முழு வீச்சில் செயல்பட்டேன். நடிப்பில் முழுவதுமாக இறங்குவதற்கு முன் மாதத்தில் இவ்வளவு சம்பாதித்தால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்தது. அடுத்தடுத்து தனக்கு அமைந்த படங்கள் தன்னுடைய நம்பிக்கையை கூட்டியது.

கவின்

இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் கதை ரொம்ப சிம்பளாகத்தான் இருக்கும். டிரைலர் பார்க்கும்போதே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இது வேறுமாதிரியான ஸ்டைலில் இருக்கும். அந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவபாலனின் முதல் இயக்கம், நெல்சன் அண்ணாவின் முதல் தயாரிப்பு. அதனால் இந்தப் படத்தில் நடிக்காமல் ஒரு பகுதியாக இருந்தால் கூட நான் சந்தோஷமாக இருந்திருப்பேன்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.