GOAT: வாழ்த்திய ரஜினிகாந்த்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய வெங்கட் பிரபு!

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘கோட்’ (GOAT). நடிகர் விஜய், நடிகர் பிரசாந்த், நடிகர் பிரபுதேவா, நடிகர் அஜ்மல், நடிகை சினேகா, லைலா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், விஜய் நடிப்பில் இரண்டு கதாபாத்திரங்கள் வரவேற்பைப் பெற்றது.

கோட்

அதைத் தொடர்ந்து படம் அக்டோபர் 3 முதல் நெட்பிஃபிலிக்ஸில் வெளியானது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கோட் படத்தைப் பார்த்துவிட்டு, வாழ்த்தியதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “எங்களை அழைத்து, எங்கள் கோட் படத்தை அரவணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி தலைவா!! முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் என்றென்றும் நன்றி, உங்கள் அனைவருக்கும் என் அன்புகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.