Israel : `ஹெஸ்பொல்லா, மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது' – ட்ரோன் தாக்குதலுக்கு நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டில் ட்ரோன் தாக்குதல் முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியான நிலையில், ஹெஸ்பொல்லா ‘மிகப் பெரிய தவறைச் செய்துவிட்டது’ என்று எச்சரித்துள்ளார் நெதன்யாகு.

சனிக்கிழமை தொடங்கி தெற்கு பெய்ரூட், காசா பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தீவிரமான தாக்குதல்கள் நெதன்யாகு கொலை முயற்சிக்கு பதிலடியாக கருதப்படுகின்றன.

நெதன்யாகு மற்றும் அவரது மனைவி மீது கொலை முயற்சி நடந்ததாகக் கூறப்பட்ட நிலையில், “இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் எவரும் அதற்கு உரிய விலையைக் கொடுத்தேத் தீர வேண்டும்” என்றும் கடுமையாக பேசியிருக்கிறார்.

இஸ்ரேலின் சிசேரியா நகரில் உள்ள நெதன்யாகுவின் வீட்டை நோக்கி ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக செய்திகாள் தெரிவிக்கின்றன.

நெதன்யாகுவின் எக்ஸ் தள பதிவில், “இன்று என்னையும் என் மனைவியையும் கொலை செய்ய இரானின் பினாமி (ஹெஸ்பொல்லா) எடுத்த முயற்சி மிகப் பெரிய தவறு.

இது நானோ, இஸ்ரேல் அரசோ எதிர்கால பாதுகாப்புக்காக எங்கள் எதிர்களுடன் போரிடுவதைத் தடுக்காது.

நான் இரானுக்கும் அதன் பினாமிகளுக்கும் தீய சக்திகளுக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இஸ்ரேல் குடிமக்களை தாக்க முயற்சிக்கும் எவரும் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்; நாங்கள் தொடர்ந்து தீவிரவாதிகளையும் அவர்களை அனுப்புபவர்களையும் அகற்றுவோம்; காசாவில் உள்ள பணயக் கைதிகளை வீட்டுக்கு அழைத்து வருவோம்; வடக்கு எல்லையில் வாழ்ந்த எங்கள் மக்களை மீண்டும் பாதுகாப்பாக அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்புவோம். இஸ்ரேல் அதன் போர் நோக்கங்களை அடைவதில் உறுதியாக உள்ளது. வருங்கால தலைமுறையினருக்காக இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பு யதார்த்தத்தை மாற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

காசாவில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு மறுநாள் (சனிக்கிழமை) இஸ்ரேல் பிரதமர் வீட்டின் அருகே ட்ரோன் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில் பிரதமரின் இல்லத்தில் பிரதமரும் அவரது மனைவியும் இருந்திருக்கவில்லை. பிரதமரின் வீட்டை நோக்கிச் சென்ற மூன்று ட்ரோன்கள் இடைமறித்து தடுத்து நிறுத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுவரை ஹெஸ்பொல்லாவோ அல்லது மற்ற ஆயுத அமைப்புகளோ ட்ரோன் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா ராணுவ தளத்தில் இஸ்ரேல் ராணுவம் போட்ட குண்டுகளால் குறைந்தது 35 பேர் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் இன்னும் பெரிய அளவிலான தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.