`ஜெய் பீம்’ படத்தின் மூலம் இந்திய சினிமா முழுக்க கவனம் பெற்றவர் இயக்குநர் த.செ.ஞானவேல். அவரின் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’.
இந்தப் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் என பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த 10-ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழுவினர் சென்னையில் நடத்தினர். அதில் பேசிய த.செ.ஞானவேல், ” ‘ஜெயிலர்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படத்தில் நடிக்க துணிச்சல் வேண்டும். அந்த தைரியத்துடன் நடித்ததால்தான் அவர் சூப்பர் ஸ்டார். `வேட்டையன்’ குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியானது மிகவும் மகிழ்ச்சி.
ரசிகர்களை தாண்டி குழந்தைகளுடன் குடும்பத்தோடு தியேட்டர் வந்து படத்தை பார்க்கிறார்கள். இது நானே எதிர்பார்க்காத ஒன்று. ஜெயிலர் படத்தின் ஹிட் தனக்கு பிரஷர் கொடுக்கக்கூடாது. என்னுடைய ஸ்டைலில்தான் வேட்டையன் படத்தை எடுக்க விரும்புகிறேன் என்பதை முன்னதாகவே நான் ரஜினி சாரிடம் கூறிவிட்டேன்.
அதற்கான மொத்த ஒத்துழைப்பும் அவர் கொடுத்தார். ரஜினி சாரைப் போலவே இந்தப் படத்தின் அனைத்து நடிகர், நடிகைகளும் கதையை நம்பியே வந்தார்கள். எனது படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. மழை உள்ளிட்ட எதையும் பொருட்படுத்தாமல் படத்தின் வெற்றியை சாத்தியப்படுத்திய ரசிகர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்திருகிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…