Kalan: "நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுக்காமல்…" – தீபா சங்கர் நகைச்சுவை பேச்சு

ராமலெட்சுமி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் கலன் திரைப்படத்தை, `கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் அப்புகுட்டி, தீபா, யாசர், சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கலன் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு பேசிய நடிகை தீபா சங்கர், “சாமிப்படம் என்றுதான் என்னிடம் கூறினார்கள். உண்மையில் இது சாமிப்படம் அல்ல. அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தைக் கூறும் படம்.

கலன் திரைப்படத்திலிருந்து

இதுபோன்ற படங்களில் ஆண்கள்தான் கதாநாயகனாக மாஸ் டைலாக் எல்லாம் பேசுவார்கள். ஆனால், இந்தப் படம் பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார். பெண்ணை பிரம்மதேவன் படைக்கும்போது, அனைத்து வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்திப் படைத்தாராம். ஆனால், அந்தப் படைப்பு முழுமையாகவில்லையாம். இறுதியில் பாம்புப் புற்றுக்குள் கைவிட்டாராம். அதிலிருந்த பாம்பு, விஷத்தைக் கக்கியதாம். அதையும் வைத்துத்தான் பெண் என்ற பிரம்மாண்ட சக்தியைப் படைத்தாராம். பெண் அம்மாவாக, அக்காவாக, மனைவியாக என அமைதியின் சொரூபமாகவே இருப்பாள்.

ஆனால், எப்போது அதிகார வர்க்கம் பெண்கள் மீது அத்துமீறுமோ அப்போதுதான் பெண் அந்த விஸ்வரூபத்தை எடுப்பாள். முத்தாலம்மன் கதையும் அதுதான். இந்தப் படத்தில் பெண்ணை அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் சாட்சியாக நிறுத்தியிருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போது இயற்கையே அதைச் சமன் செய்துகொள்ளும். என்றைக்கும் தர்மம் வீழாது. அதற்கு அழிவே கிடையாது.

தீபா ஷங்கர்

எனக்கு ஒரு நடிகையாக அங்கீகாரம் கிடைத்தது கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகுதான். நான் ஓவர் ஆக்டிங் செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல், நான் நன்றாக நடிக்கிறேன் எனப் பத்திரிகையாளர்கள்தான் எழுதுகிறார்கள். அவர்களின் ஆதரவால்தான் என் பயணம் சிறப்பாக இருக்கிறது. எப்போதும் எனக்கு உங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.