இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் இடையில் சந்திப்பு 

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு லெவன் S. சகர்யான் (Levan S. Dzhagaryan) பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு)  அக்டோபர் 18 ஆம் திகதி கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்தார். 

ரஷ்ய தூதுவரை அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச்  சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.