நாக்பூர்: இந்தியாவில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துத் தயாரிப்பு மையமாக நாக்பூர் திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும்ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிபொருள்கள் நாக்பூர் ஆலைகளிலிருந்து ஏற்றுமதியாகியுள்ளன. மேலும் ரூ.3,000 கோடிக்கு ஆர்டர்கள் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கேரியா, ஸ்பெயின், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, போலந்து, வியட்நாம், பிரேசில், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் நாக்பூரிலிருந்து மிக அதிக எண்ணிக்கையில் வெடிபொருள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கிசேமித்து வருகின்றன.
இந்த நாடுகளிலிருந்து போரில்ஈடுபடும் நாடுகளுக்கு வெடிபொருள்கள் அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது.