பெங்களூரு: இந்திய உயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பு ‘BIODYNAMIC ASSOCIATION OF INDIA’ (BDAI) அக்டோபர் 22, 23-ம் தேதிகளில் இந்திய அளவிலான உயிர் சக்தி வேளாண் மாநாட்டை பெங்களூருவில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில், ‘இந்தியாவின் வருங்கால உயிர் சக்தி வேளாண்மை வடிவமைத்தல்’ என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் இந்தியாவில் உள்ளபல ஆராய்ச்சியாளர்கள், உயிர் சக்தி வேளாண் விவசாயிகள், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்து கொண்டு தங்கள்அனுபவங்களையும், அவர்களின் தொலைநோக்கு நுண்ணறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். இதுஇயற்கை விவசாயத்தை ஒட்டியது என்று அகில இந்திய உயிர் சக்திவேளாண் அமைப்பின் தலைவர் கே.சந்திரசேகரன் கூறியுள்ளார்.
கால பருவங்கள் மூலம் வழி நடத்தப்படும் இயற்கை வழி பஞ்சாங்க லயங்களின் மூலம் பயிர்கள் மட்டுமல்லாது மனிதன் மற்றும் விலங்குகளின் நலன்களை உள்ளடக்கிய முழுமையான ஒரு பார்வை கொண்டது உயிர் சக்திவேளாண்மை. இது இயற்கையோடு இணைந்துசெய்யப்படும் ஒரு விவசாய முறை. மண்ணுக்கு ஊட்டம் கொடுத்து, பல்லுயிர் சுழலை மேம்படுத்தி, அதன் மூலம் தரமான உணவு உற்பத்தி செய்வதால் நிலையான மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை வருங்கால சந்ததியினருக்கு உருவாக்கிக் கொடுக்க இயலும் என்று சந்திரசேகரன் உறுதியாக கூறுகிறார்.
இந்த விவசாயத்தின் வெற்றிக்கு, மூலகாரணியாக இருப்பவை, உயிர் சக்தி வேளாண் தயாரிப்புகளான கொம்பு சாண உரம், கொம்பு சிலிக்க உரம் மற்றும் உயிர் சக்தி மூலிகை உரதயாரிப்பு தாதுக்கள், மூலிகைகள் மற்றும் பசு மாட்டின் சாணம். இவை சிலகுறிப்பிட்ட வழிமுறைகள் மூலம்தயாரிக்கப்படுகின்றன. இந்த தயாரிப்புகள் மண்ணை வலுப்படுத்துவதோடு உணவின் தரத்தை மேம்படுத்துகிறது. மீளும் தன்மைகொண்ட விவசாய அமைப்பை உருவாக்குகிறது.
உயிர் சக்தி வேளாண்மை மூலம் மண்ணின் ஆரோக்கியம், பயிர்உற்பத்தி மற்றும் நிலையான வாழ்வாதாரம் ஏற்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் விளக்கக் காட்சி உரைகள், பயிலரங்கு பயிற்சிகள், கருத்தரங்குகள், விவாதங்கள் மற்றும் உரையாடல்கள் நடைபெற உள்ளன. இயற்கை விவசாயத்தில் புரட்சியைஉருவாக்கும் விதமாக ஆஸ்திரியாவின் தத்துவ மேதை டாக்டர் ருடால்ப் ஸ்டைனர் நிகழ்த்திய உரையின் 100-ம் ஆண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படும். இந்த மாநாட்டில், உலகளாவிய உயிர் சக்தி வேளாண் இயக்கத்தின் மூலம் இயற்கை வேளாண்மையில் ஏற்படுத்திய தாக்கம் பற்றி விவாதிக்கப்படும்.
மண் ஆரோக்கியம்: இந்தியாவில் மண்ணின் ஆரோக்கியம், பல்லுயிரியம் நிறுவுதல் மற்றும் நிலையான வாழ்வாதாரம் போன்றவற்றை உருவாக்குவதன் மூலம் உயிர் சக்தி வேளாண்மையில் வெற்றியை மேம்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆராயப்படும்.
இந்த மாநாட்டை தொடர்ந்துஅக்டோபர் 24-ம் தேதி உயிர் சக்திவேளாண் பண்ணையை சுற்றி பார்ப்பதன் மூலம் உயிர் சக்தி வேளாண்மையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளவாய்ப்பு ஏற்படும்.
இந்த அமைப்பு விவசாயிகளுக்கு இயற்கையில் உள்ள சக்தியை பெற்று அதன் மூலம் நீர் மூலாதாரங்களையும் மண்ணையும் புத்துயிர் பெற செய்தல் மற்றும் பரம்பரைவிதைகளை பாதுகாத்தல் போன்றவற்றுக்கு உதவி வருகிறது. உயிர் சக்தி வேளாண்மையானது இந்தியாவில் முக்கியத்துவம் பெற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த விவசாய முறையை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.
அத்துடன் வணிக நிறுவனங்கள் இந்த முறைப்படி விளைந்த விளைப்பொருட்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தொடங்கியுள்ளன. இவ்வாறு வளர்ந்து வருகின்ற ஆர்வம்தான் நிலையானமற்றும் இயற்கை விவசாயத்தில் பெருவாரியான மாற்றம் உருவாகியுள்ளதை பிரதிபலிக்கிறது.
மேலும், ஆரோக்கியமான சுற்றுப்புற சூழல் சார்ந்த ஒரு உணவு உற்பத்தி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். மண்தரத்தை மேம்படுத்துவது மூலமாகவும் பல்லுயிரியல் சுழலை ஊக்குவிப்பதன் மூலமும் நிலைநிறுத்தப்பட்ட வேளாண் அமைப்பை உருவாக்கிஅதன் மூலம், அதிக தரம் கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு உற்பத்தி செய்வதாகும்.
உலக நாடுகள் ஆர்வம்: உயிர் சக்தி வேளாண் இயக்கத்தை பல நாடுகள் அதிதீவிரமாகவும் எடுத்துக் கொண்டுள்ளன. கொள்கைகளும் உலகளாவிய வகையில் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியஉயிர் சக்தி வேளாண் கூட்டமைப்பானது இந்த உருமாற்றமிக்க புரட்சிகரமான விவசாய முறையை நாடெங்கும் முன்னெடுத்து செல்கிறது. ரசாயனத்தை சார்ந்து இருப்பதை தவிர்ப்பது மற்றும் விவசாயத்தில் முழுமையான அணுகுமுறை கொண்ட நிலையை உருவாக்க ஊக்குவிக்கிறது.