`கத்தி’ திரைப்படம் வெளியாகி இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.
ஏ. ஆர். முருகதாஸுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்த திரைப்படம் `கத்தி’. அப்போது வரை வெறும் 5 படங்கள் மட்டும் இசையமைத்திருந்த 24 வயது இளைஞனை நம்பி ஒரு பெரிய திரைப்படத்திற்கான இசைப் பணிகளை ஒப்படைந்திருந்தார் ஏ. ஆர். முருகதாஸ். அந்த இளைஞன்தான் அனிருத். இன்று ஹிட் காம்போவாக பதிவாகியிருக்கும் விஜய் – அனிருத் கூட்டணிக்கு விதைப் போட்டது இத்திரைப்படம்தான். இத்திரைப்படத்திற்கு பணியாற்றியது குறித்து 10 வருடத்திற்கு முன்னால் விகடனுக்கு அளித்த பேட்டியில் அனிருத் சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.
அவர், “என்னுடைய இரண்டாவது திரைப்படமான `எதிர்நீச்சல்’ வெளியாகி 3 நாட்கள் கடந்திருந்த சமயம். அப்போதுதான் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் சார் ஆபிஸிலிருந்து போன் வந்துச்சு. அவர், ` நான் அடுத்ததாக கத்தினு ஒரு படம் விஜய் சாரை வச்சு பண்றேன். எதிர்நீச்சல் திரைப்படத்துல உங்களோட பின்னணி இசை, பாடல்களெல்லாம் ரொம்பவே நல்ல இருந்தது’ னு சொன்னார். என்னுடைய கரியர்ல ஆறாவது திரைப்படமே கத்தி. இந்த மாதிரியான வாய்ப்பு வேற யாருக்கும் கிடைக்காது. என்னை இந்த படத்துக்கு தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் முருகதாஸ் சார் சொன்னார்.
அவங்க அப்பார்ட்மென்ட்ல இருக்கிற குழந்தைகளெல்லாம் என்னுடைய பாடலைகளைதான் பாடிட்டு இருந்தாங்களாம். கத்தி திரைப்படத்திற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கைல பல மாற்றங்கள் வந்திருக்கு. `செல்ஃபி புள்ள’ பாடலோட டிராக்கை விஜய் சாருக்கு முதல்ல அனுப்பியிருந்தேன். அவர் அந்த பாடலை அவருடைய போன்லையே பாடி ரெக்கார்ட் செய்து ஹோம் வொர்க்லாம் பண்ணிட்டுதான் வந்தார். அதன் பிறகு பாடல் ரெக்கார்ட் பண்ணினதும் `வா நம்ம ஒரு செல்ஃபி எடுத்துப் போடுவோம்’னு விஜய் சார் சொன்னார். அதன் பிறகு நானும் அவருகு கிரேஸியாக போஸ் கொடுத்து போட்டோ போட்டோம்!” எனக் கூறியிருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…