சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
இதுகுறித்த விவரங்கள்…
பணியின் பெயர்: விற்பனையாளர் (Salesman)
காலியிடங்கள்: 33,
சம்பள விகிதம்: ரூ.8,600 – ரூ.29,000,
கல்வித்தகுதி : +2 தேர்ச்சி,
விண்ணப்பக் கட்டணம் ரூ.150. ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
பணியின் பெயர்: கட்டுநர் (Packer)
காலியிடங்கள்: 315,
சம்பள விகிதம்: ரூ.7,800 – ரூ.26,000,
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி,
விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் SC/ST/PWD பிரிவினர்களுக்கும், ஆதரவற்ற கைம்பெண்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
வயது வரம்பு
வயது 01-07-2024 தேதியின்படி கணக்கிடப்படும்.
பொது பிரிவினருக்கு 32 வயது வரை.
SC/ST/SCA/BC/MBC பிரிவினர்கள் மற்றும் அனைத்து பிரிவையும் சேர்ந்த ஆதரவற்ற கைம்பெண்களுக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
பொது பிரிவைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 50 வயது வரையிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு 42 வயது வரையிலும் வயது வரம்பில் சலுகை உண்டு.
காலியிட விவரங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் www.drbchn.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் விண்ணபிக்க வேண்டும்.
விண்ணபிக்கக் கடைசிநாள்: 07.11.2024 அன்று பிற்பகல் 5.45 மணி வரை.
விற்பனையாளர் (Salesman) பணிக்கு விண்ணபிக்க NOTIFICATION NUMBER : 01-2024 Recruitment of SALESME இங்கே கிளிக் செய்யுங்கள்
கட்டுநர் (Packer) பணிக்கு விண்ணபிக்க NOTIFICATION NUMBER : 01-2024 Recruitment of PACKERS இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் விண்ணப்ப நகலை டவுன்லோடு செய்து நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டும்.
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத்தேர்வு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும். நேர்முகத் தேர்விற்கு (கல்வித்தகுதி, வயது, சாதி) அசல் சான்றிதழ்களைக் கொண்டுவர வேண்டும்.
மேலும் முழுவிவரங்களுக்கு NOTIFICATION NUMBER : 01-2024 இந்த லிங்கை கிளிக் செய்து அறிக்கையை முழுவதும் படித்து விண்ணப்பம் செய்யுங்கள்.