டிஜிட்டல் மயப்படுதலுக்காக தனியான அமைச்சை நியமிக்கும் திட்டம் காணப்படுவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நேற்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இத்துறையில் நிபுணத்துவ மாணவர்களை ஒன்றிணைத்து இந்த வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நோக்கத்துடனேயே டிஜிட்டல் அமைச்சை ஸ்தாபிப்பதாகத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர்;
அரச சேவையில் அதிகமான பணிகளை டிஜிட்டல் மயப்படுத்துவது அவசியமாவதுடன், இந்த அமைச்சினால் அப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,
அதனால் நிறுவனங்களில் இடம் பெறும் அதிகமான இலஞ்ச ஊழல்களை தடுப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் அமைச்சர் தெளிவு படுத்தினார்.