அடுத்த மாதம் 14- ம் தேதி திரைக்கு வருகிறது கங்குவா.
சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். படத்தின் ப்ரோமோஷன் பணிகளை ஒரு மாதத்திற்கு முன்பாகவே படக்குழு தொடங்கிவிட்டது. அதற்காக பல மாநிலங்களுக்கும் பம்பரமாய் சுற்றி திரிகிறார் சூர்யா. தனியார் ஊடகத்திற்கு அளித்தப் பேட்டியில் சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் சூர்யா.
அவர், “பல நடிகர்களும் தங்களுடைய திரைப்படத்தை பார்க்கவே கூச்சப்படுவார்கள். நானும் அப்படிதான். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் உள்பட பல இயக்குநர்கள் நான் முதல் நாள் முதல் காட்சியில் பங்குபெறாததை எண்ணி வருத்தமடைந்திருக்கிறார்கள். நமக்கு எப்போதும் அந்த திருப்தி என்பது ஏற்படாது. நான் நடித்த காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது `இதை இன்னும் இப்படி செய்திருக்கலாம்’ என்ற எண்ணமே தோன்றும். கடந்த வாரம் நடித்த காட்சிகள் பற்றி இந்த வாரம் இயக்குநர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பேன். `அந்த காட்சி சரியாக இருந்ததா? மீண்டும் டேக் எடுப்போமா’ என்று பேசிக் கொண்டே இருப்பேன்.
இருபது வருடங்களுக்கு முன்பு நான் ரஜினி சாரை விமானத்தில் சந்தித்தேன். அப்போது அவர் `நீங்கள் ஹீரோ மட்டுமல்ல. நல்ல நடிகரும்கூட. அதனால் கமர்சியல் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்காதீர்கள்’ எனக் கூறினார். அந்த விஷயம் என்னில் பதிந்துவிட்டது. அதனால்தான் `சிங்கம்’ போன்ற கமர்சியல் திரைப்படத்திலும் நடிக்கிறேன். அதே சமயம் `7-ம் அறிவு, ஜெய் பீம்’ மாதிரியான கன்டன்ட் திரைப்படங்களிலும் நான் நடிக்கிறேன். ரசிகர்களும் அதைதான் என்னிடம் எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய மகளும் என்னிடம் ` எப்படி அப்பா, சிங்கம் மாதிரியான படத்தில் நடித்துவிட்டு ஜெய் பீம் மாதிரியான படங்களிலும் நடிக்கிறீர்கள் ‘ எனக் கேட்டார். ” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…