அமெரிக்க அதிபர் தேர்தல்: தபால் வாக்கு செலுத்திய முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தபால் வாக்கு செலுத்தியதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். தற்போது, தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ். அமெரிக்கா அவரது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காண தயாராக இருக்கிறது” என்று கூறி வருகிறார்.

இதனிடையே இது குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு, குறிப்பிட்டுள்ளதாவது, “அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான எனது வாக்கை தபால் மூலம் செலுத்தினேன். இது என்னுடைய நண்பருக்கு ஹாய் சொல்வதுப் போல எளிமையாக இருந்தது. நீங்களும் என்னை போல தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பினால், இப்போதே வாக்குச்சீட்டை மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எதன் மூலம் எப்படி வாக்களித்தாலும், யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பதை மட்டும் தெளிவாக திட்டமிடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஒரு ட்விட்டர் பதிவில், “நான் மீண்டும் மிச்சிகனில் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் நிறைய ஆபத்துகள் உள்ளன, ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக உள்ளது. அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸும், அமெரிக்காவின் துணை அதிபர் வேட்பாளர் Tim Walz ஆகிய இருவரும் நம் நாட்டை முன்னோக்கி வழிநடத்தவும், அமெரிக்க மக்களுக்கு தங்களது சேவையை செய்யவும் தயாராக உள்ளனர்.

அதனால் நாம் அனைவரும் வாக்களித்தால் மட்டுமே அது நடக்கும். அதனால் முன்கூட்டியே தபால் மூலமாகவோ, நேரில் சென்றோ நவம்பர் 5ஆம் தேதி வாக்களிக்களியுங்கள். மேலும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக பணியாளர்களை அணுகி வாக்களிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கும் உதவுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.