AMARAN: இராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்தியேகமாக திரையிடப்பட்ட 'அமரன்' – குவியும் பாராட்டுகள்!

கமல்ஹாசன் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் `அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்து, தேசமே சல்யூட் அடித்த மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன் நடித்த்திருக்கிறார், அவரின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தேசப் பற்று மிக்க இராணுவ வீரரின் எல்லையற்ற அன்பு, தேசப் பற்று, தியாகம், வீரம், அவரது குடும்பம் பற்றிய உணர்வுப்பூர்வமான உண்மைக் கதையைச் சொல்லும் இத்திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்காணவிருக்கிறது.

அமரன்

இந்நிலையில் டெல்லியில் நேற்று (அக்டோபர் 24) இராணுவ அதிகாரிகளுக்குப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டிருக்கிறது ‘அமரன்’ திரைப்படம். படத்தைப் பார்த்த இராணுவ அதிகாரிகள் மனம் நெகிழ்ந்து படக்குழுவைப் பாராட்டியிருக்கின்றனர். மேலும், இது ஒவ்வொரு இராணுவ வீரரின் கதை என்றும் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு செய்யப்பட்ட மரியாதை இப்படம் என்றும் உணர்ச்சிகரமாகப் பாராட்டியிருக்கின்றனர். இப்படத்தைப் பார்த்த மணிஷாரதி என்பவர், “அமரன் திரைப்படத்தைப் படத்தை அதன் வெளியீட்டிற்கு முன்பே பிரத்தியேகமாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தேசப்பற்று, தியாகத்தைத் திரையில் பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. இப்படம் அவரின் தியாகத்திற்கு செய்யும் ஒரு மரியாதை. நல்ல இயக்கம், நடிப்பு. நடிகர் சிவகார்த்திகேயன் திறமையான, தன்னடக்கம் கொண்ட நல்ல நடிகர். மேஜர் முகுந்த் வரதராஜன் கொண்டாடப்படுவார். இந்திய இராணுவத்திற்கு ஒரு சல்யூட்” என்று நெகிழ்ச்சியாகப் பாராட்டியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.