SK – Bigg Boss Tamil 8: `ஒற்றுமை ரொம்ப முக்கியம்!' – பிக் பாஸ் வீட்டிற்குள் சிவகார்த்திகேயன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு வார எவிக்‌ஷன்கள் முடிந்துவிட்டது.

மூன்றாவது வாரத்தில் போட்டியாளர்கள் பலரும் சுறு சுறுப்புடன் களமிறங்கி என்டர்டெயின் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல திரைப்படங்களை விளம்பரப்படுத்த இப்படியான கவனத்தை ஈர்க்கும் டெலிவிஷன் நிகழ்ச்சிக்குள் ஒரு படக்குழுவோ அல்லது நடிகரோ செல்வது வழக்கமான ஒன்று.

அந்த வகையில் கடந்தாண்டு அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவான `டாடா’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக கவினும் அத்திரைப்படத்தின் கதாநாயகி அபர்னா தாஸும் பிக் பாஸ் வீட்டிற்க்குள் சென்றிருந்தனர். இதுமட்டுமல்ல, `பார்க்கிங்’ திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் ஹரீஷ் கல்யாண், இந்துஜா ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.

SK in bigg boss

கவினும் ஹரீஷ் கல்யாணும் இதற்கு முந்தைய சீசன்களின் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ற செய்தி ஊர் அறிந்ததே. ஆனால், இந்தாண்டு `ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு’. எதிர்பார்க்காத நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அவர் நடித்திருக்கும் `அமரன்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோவும் தற்போது வெளியாகியிருக்கிறது. பிக் பாஸ் வீட்டில், ” அமரன் திரைப்படம் பல எமோஷன்களை பதிவு செய்கிற திரைப்படம். அமரன் திரைப்படத்திற்கும் பிக் பாஸுக்கும் பல தொடர்புகள் இருக்கிறது. ஒற்றுமை மிகவும் முக்கியம்” என போட்டியாளர்களிடம் பேசியிருக்கிறார். வேறு என்னென்ன விஷயங்கள் பேசயிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து எபிசோடில் பார்க்கலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.