இஸ்ரேல் பிரஜைகள் அவசர சந்தர்ப்பத்தில் தொடர்பு கொள்வதற்கான விசேட தொலைபேசி இலக்கம் தொடர்பான அறிவித்தலொன்றை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது
சுற்றுலாப் பயணிகளாக அல்லது ஏதேனும் தேவைக்காக இலங்கைக்கு வந்துள்ள இஸ்ரேல் நாட்டு பிரஜைகளுக்கு ஏதேனும் தனிப்பட்ட பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு அவசியமாயின் 071-8592651 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்த தொலைபேசி இலக்கத்தில் சுற்றுலா மற்றும் கடற்பகுதிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜயஸ்ரீ உடன் தொடர்பு கொள்வதனால், தமது தேவை தொடர்பாக அவர் கண்டறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு உதவி வழங்குவார் என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவலை வழங்கும் போது தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் அதற்கு அவசியமான உறுதிப்படுத்தப்பட்ட அடையாளத்தை சம்பந்தப்பட்ட தகவலுடன் வழங்குமாறு இலங்கை பொலிஸார் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.