லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவாகியிருக்கிறது.
இன்று அவருக்கு மிகப்பெரிய பிராண்டாக உருவாகியுள்ள `எல்.சி.யு’ என்பதற்கு தொடக்கப்புள்ளி `கைதி’ திரைப்படம்தான். அத்திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் `எல்.சி.யு’ ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.
`லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’ எனப்படும் `எல்.சி.யு’ எப்படி உருவானது என்பது தொடர்பாக ஒரு குறும்படம் எடுத்திருப்பதாக அவர் வழங்கிய `ஃபைட் கிளப்’ திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் கூறியிருந்தார். அதன் பிறகு அந்த குறும்படம் தொடர்பாக எந்த சத்தமும் வெளிவரவில்லை. தற்போது அந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார் லோகேஷ்.
10 நிமிட கால அளவிலான இந்த குறும்படம் `எல்.சி.யு’-வின் முன்னுரை குறித்து எடுத்துரைக்குமாம். இந்த குறும்படத்திற்கு `சாப்டர் ஜிரோ (Chapter Zero )’ என பெயரிட்டிருக்கிறார்கள். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் கதாபாத்திரங்கள் உருவானது குறித்தும், அதன் மேல் எழுந்த சந்தேகங்களுக்கெல்லாம் இந்த குறும்படம் விளக்கமளிக்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…