கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள நபர்களைக் கோவை மாவட்டத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய சாட்சிகள் சிலரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மிக முக்கிய சாட்சியான அ.தி.மு.க மாநில வர்த்தக அணி தலைவரும் பிரபல மர வியாபாரியுமான சஜீவனை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து தெரிவித்த காவல்துறையினர், “கொடநாடு வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை முதல் தற்போது வரை சஜீவன் பெயர் தொடர்ந்து அடிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதுமட்டுமின்றி கொடநாடு பங்களாவில் மரவேலை செய்து கொடுத்த சஜீவனுக்குப் பங்களாவின் மூலைமுடுக்குகள் எல்லாமே அத்துப்படி. இதனாலேயே சஜீவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.
நீலகிரியில் வனவிலங்கு வேட்டையாடப்பட்டது தொடர்பாக சஜீவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கடந்த சில மாதங்களாக அவர் தலைமறைவாக இருப்பதாகத் தெரிகிறது. வருகின்ற நவம்பர் மாதம் 5-ம் தேதி கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. ஆஜராகாத படத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY