ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் பிஎச்.டி படிப்பிலிருந்து தமிழக மாணவியை வெளியேற்றிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

புதுடெல்லி: ரூ.1 கோடி செலவிட்ட நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பிஎச்.டி. படிப்பிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டது என தமிழக மாணவி குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் லட்சுமி பாலகிருஷ்ணன். இவர் 2 முதுகலை பட்டப் படிப்பை இந்தியாவில் முடித்துள்ளார். அதன் பிறகு ஆங்கிலத்தில் ஆய்வுப் படிப்புக்காக (பிஎச்டி) இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். வில்லியம் ஷேக்ஸ்பியர் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ள அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் 4-வது ஆண்டில் பிஎச்டி படிப்பில் இருந்து அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.