இஸ்ரேல் – ஹாமஸ் இடையே நடந்துவரும் போர், ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையில் இஸ்ரேலுக்கு எதிராகவும் ஹாமஸுக்கு ஆதரவாகவும் லெபனானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு செயல்படத் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல், குண்டு வீச்சு எனப் போர் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இஸ்ரேல் ஹிஸ்புல்லாவையும் தாக்கத் தொடங்கியது. ஒருபக்கம் ஹமாஸை குறிவைப்பதாக பாலஸ்தீனம், காஸாமீதும், மற்றொருபுறம் ஹிஸ்புல்லாவை குறிவைப்பதாக லெபனான், மீதும் தாக்குதல் நடத்திவருகிறது.
இதற்கிடையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த ஜூலை 31-ம் தேதி ஹமாஸ் இயக்கத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இவர் ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்தது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் பதவியேற்றுக்கொண்டார். அவரையும் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதற்கு இஸ்ரேல் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது. இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறித்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், காஸாவில் உள்ள கான்யூனிஸ் பகுதியில் நேற்று முன் தினம் இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை லெபனான் நாட்டுத் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜியாத் மக்கரியும் உறுதி செய்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs