TVK Vijay: `வரவேற்கிறேன்!மகிழ்ச்சி!' – விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த இயக்குநர் பா.இரஞ்சித்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கட்சியின் கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாடல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது த.வெ.க. இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த விஜய் `பிளவுவாத சக்திதான் நம்முடைய எதிரி’ என மேடையில் பேசி, தொண்டர்களின் கரகோஷத்தை அள்ளினார்.

விஜய்யின் இந்த அரசியல் பக்கத்திற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது மேடையில் விஜய் பேசி முடித்ததும் இயக்குநர் பா.இரஞ்சித்தும் விஜய்க்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

அவர், “ `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற புவியியல் அமைப்பின் அடிப்படையான தத்துவத்தை தாங்கி தன் முதல் அரசியல் கன்னி பேச்சை முடித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு.விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! `ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ மற்றும் சாதி மத வர்க பிரிவினை வாதத்திற்க்கும் ஊழலுக்கும் எதிராக செயல்படப்போவதாக அறிவித்திருப்பதை வரவேற்கிறேன்!மகிழ்ச்சி!” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.