ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணிக்கு வெற்றிக் கிண்ணம்

ஓமன், அல் அமெரத் மைதானத்தில் நடைபெற்ற ஆசியாவில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ரி20 கிண்ண இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. 

இந்த இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ஓட்டங்களை பெற்றது. 

இலங்கை அணி சார்பாக Sahan Arachchige ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்களை பெற்றார். 

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Bilal Sami 3 விக்கெட்டுக்களையும், AM Ghazanfar 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்கு 134 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ‘ஏ’அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை பெற்ற வெற்றிபெற்றது. 

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக Sediqullah Atal, ஆட்டமிழக்காமல் 55 ஓட்டங்களை பெற்றார். 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Sahan Arachchige, Dushan Hemantha மற்றும் Eshan Malinga ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். 

இலங்கை அணி இதற்கு முன்னர் 2 முறைகள் (2017, 2018) இறுதிப் போட்டியில் விளையாடியுள்ள நிலையில், 2 போட்டிகளிலும் இலங்கை அணி செம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.